பெண்களுக்கான மரதனில் புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி

204

இப்போதைய நாட்களில் இலங்கையினை சேர்ந்த தடகள வீர, வீராங்கனைகள் சர்வதேச அரங்கில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருவது அதிகரித்து கொண்டே செல்கின்றது.

20 வருடங்களின் பின் மகளிர் அஞ்சலோட்டத்தில் சாதனை படைத்த இலங்கை அணி

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற 23……….

அந்தவகையில் அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயவர்தன, ஜேர்மனியின் டஸல்டோர்ப் (Dusseldorf) மரதன் ஓட்டப் போட்டியினை 2:34:10 என்கிற நேரப்பதிவோடு நிறைவு செய்து இரண்டாம் இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.

அதோடு, பல்வேறு நாடுகளின் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த மரதன் ஓட்டத் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட ஹிருனி விஜேயவர்தன, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக ஹிருனி விஜேயவர்தன பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டித் தொடரை 2:36:35 என்ற நேரப்பதிவோடு நிறைவு செய்தது தேசிய சாதனையாக அமைந்திருந்தது.

இதேநேரம், ஹிருனியின் புதிய சாதனைப்பதிவு தென் கிழக்காசியாவில் பெண் வீராங்கனை ஒருவரின் சிறந்த அடைவுமட்டமாகவும் கருதப்படுகின்றது.

தொண்டர் படையணி மெய்வல்லுனரில் அசாம், ஆஷிக் போட்டிச் சாதனை

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளுக்கிடையில் வருடந்தோறும் …….

இதுமட்டுமின்றி, ஹிருனி தனது இந்த புதிய தேசிய சாதனையுடன் கட்டாரில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் IAAF உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் பங்கெடுக்கும் தகுதியினையும் பெற்றிருக்கின்றார்.

IAAF உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கட்டாரின் தலைநகரமான டோஹாவில் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

ஹிருனி விஜேயவர்த்தன IAAF உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபெறும் தகுதியினை பெற்றுக் கொண்ட முதல் இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஹிருனி விஜேயவர்தன டஸல்டோர்ப் மரதன் ஓட்டத் தொடரில் கிடைத்த வெற்றி குறித்து பேசிய பொழுது, இது மிகவும் கடினமான நிலைமைகளுக்குள் தான் ஓடிப் பெற்ற வெற்றி என கூறினார்.

இராணுவ அரை மரதன் ஓட்டத்தில் சம்பியனாகிய சண்முகேஸ்வரன்

இலங்கை இராணுவத்தினால் 54ஆவது ……

மேலும், பேசிய ஹிருனி தான் இந்த மரதன் ஓட்டப் போட்டியில் சில நேரங்களில் சிரமங்களை எதிர்கொண்டதோடு, குறித்த சந்தர்ப்பங்களின் போது இலங்கை மக்கள் கடந்த வாரம் எதிர்கொண்ட இன்னல்களை நினைத்துக் கொண்டே தன்னை வலுப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் இலங்கையில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 350 இற்கு மேற்பட்டோர் பலியாகியதோடு, 500 பேர் வரையில் காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹிருனி விஜேயவர்தன டஸல்டோர்ப் மரதன் ஓட்டத் தொடரில் கிடைத்த வெற்றியினை கோர சம்பவம் ஒன்றினை எதிர் கொண்ட தன் நாட்டு மக்களுக்கு அர்ப்பணம் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<