அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ காரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது மனுஜ காரியப்பெரும, அணியை நிர்வாகிப்பார் என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவ குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா உறுதிப்படுத்தினார்.
பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
தற்போதைய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் உள்ளூர் மற்றும் சர்வதேச மேம்பாட்டு, அபிவிருத்தி ஆலோசகராக இருக்கும் காரியப்பெரும, பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு மட்டுமே இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் பின்னர் இலங்கை அணிக்கு நிரந்தர முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக ஜெரம் ஜயரத்ன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…