பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் முன்னாள் வீரர் எடிசன் கவானி ஒரு சுதந்திரமான வீரர் பரிமாற்ற முறையில் மன்செஸ்டர் யுனைடட் அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த ஜூன் மாத முடிவில் PSG அணியிடம் இருந்து வெளியேறிய உருகுவே அணி வீரரான 33 வயதுடைய கவானி ஓர் ஆண்டுகால ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
சம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ – மெஸ்ஸி மோதல்
கவானி 556 கழகமட்டப் போட்டிகளில் 341 கோல்களை பெற்றுள்ளார். இதில் பிரான்ஸின் பலம்கொண்ட PSG அணிக்காக 301 போட்டிகளில் 200 கோல்களை பெற்றுள்ளார். தவிர அவர் உருகுவே அணிக்காக 116 சர்வதேச போட்டிகளில் 50 கோல்களை புகுத்தியுள்ளார்.
இந்நிலையில், அவர் வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி சம்பியன்ஸ் லீக் குழுநிலை போட்டியில் தனது முன்னாள் அணியான PSG ஐ எதிர்த்து ஆட வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னர் யுனைடட் அணி வரும் 17 ஆம் திகதி நியூகாசில் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், மன்செஸ்டர் யுனைடட் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியில் 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையிலேயே கவானியின் வருகை இடம்பெற்றுள்ளது.
Video – போட்டி முடிந்ததும் கோல் அடித்து வென்ற Manchester United | FOOTBALL ULAGAM
“மன்செஸ்டர் யுனைடட் உலகில் மிகச் சிறந்த கழகங்களில் ஒன்று. அதில் இடம்பெறுவது உண்மையில் கௌரவமாகும்” என்று கவானி குறிப்பிட்டார். “போட்டி இல்லாத காலத்தில் நான் கடுமையாக உழைத்தேன். இந்த சிறந்த கழகத்தில் அடுவதற்கும் போட்டியிடுவதற்கும் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் கவானிக்கான ஊதியத்தில் கழகத்தின் ஊதிய கட்டமைப்புகளுக்கு அப்பால் எந்த கொடுப்பனவுகளும் இல்லை என்று தெரியவருகிறது.
பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழக முன்கள வீரர் நெய்மாருடனான முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே கவானி அந்த கழகத்தில் இருந்து விலகினார்.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<