குருநாகல, வெலகெதர கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற புனித அன்னம்மாள் மற்றும் மலியதேவ கல்லூரிகளுக்கு இடையிலான இரண்டு நாட்களை கொண்ட 34ஆவது பெரும் சமர் பலத்த போட்டியின் மத்தியில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய குருநாகல, புனித அன்னம்மாள் கல்லூரி ரந்தீர ரணசிங்க குவித்த பெறுமதியான 98 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
புனித அன்னம்மாள் கல்லூரி சார்பாக ரந்தீர ரணசிங்க 98 ஓட்டங்கள், தரிந்த விஜேசிங்க 56 ஓட்டங்கள் மற்றும் கவிந்து ரணசிங்க 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இன்றைய நாளை ஆரம்பித்த மலியதேவ கல்லூரி அணி சார்பாக தமித சில்வா அதிக பட்ச ஓட்டங்களாக 85 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். அதே நேரம் 22 ஓட்டங்களுடன் இன்றைய தினம் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பிரையன் சந்திரசேன 30 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் தமது முதலாவது இன்னிங்சுக்காக மலியதேவ கல்லூரி 101.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
புனித அன்னம்மாள் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் மலியதேவ கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த புபுது கனேகம 68 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் கவிந்து ரணசிங்க மற்றும் பியுமல் சின்ஹவன்ச ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனையடுத்து, 83 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த புனித அன்னம்மாள் கல்லூரி 14 ஓவர்களுக்கு எவ்விதமான விக்கெட் இழப்புமின்றி 53 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.
போட்டியின் சுருக்கம்
புனித அன்னம்மாள் கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 307/7d (73.5) – ரந்தீர ரணசிங்க 98, தரிந்து விஜேசிங்க 56*, கவிந்து ரணசிங்க 56, புபுது கனேகம 34, விமுக்தி பண்டார 27, தமித சில்வா 2/68
மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 224 (101.2) – தமித சில்வா 85, கவின் பண்டார 30, பிரையன் சந்திரசேன 30, முதித்த பிரேமதாச 20, புபுது கனேகம 5/68, கவிந்து ரணசிங்க 2/47, பியுமல் சின்ஹவன்ச 2/54
புனித அன்னம்மாள் கல்லூரி, குருநாகல் (இரண்டாம் இன்னிங்ஸ்): 53/0 (14)