தற்பொழுது நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (27) அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு லசித் மாலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியிருந்தது. எனினும், உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான இறுதி முயற்சியாக, மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடாத்துவதற்கு SLC தீர்மானித்துள்ளது.
மாலிங்க மும்பை அணியுடன் இணைவார்: மஹேல நம்பிக்கை
உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண அணிகளுக்கிடையிலான
எனவே, லசித் மாலிங்க உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற வேண்டுமாயின் அவர் மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் 6 போட்டிகளிலும் விளையாட முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.
எனினும், இன்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில், ”இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் லசித் மாலிங்கவை மாகாண அணிக்ளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இருந்து விடுவித்து, அவரை ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. சர்வதேச மட்டத்திலான பலம் வாய்ந்த வீரர்கள் மற்றும் பலமான எதிரணிகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு ஐ.பி.எல் தொடரின்மூலம் கிடைக்கின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி வழங்கியமை குறித்து லசித் மாலிங்க கருத்து தெரிவிக்கையில், ”எனக்கு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கிய இலங்கை கிரிக்கெட்டிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கை ஒருநள் அணியின் தலைவர் என்ற வகையில் இலங்கை வந்து விளையாடி, வீரர்களை அவதானிக்க வேண்டி உள்ளது. நான் மாகாண தொடரில் விளையாடுவதற்காக மும்பை அணியிடம் அனுமதி வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
முன்னைய செய்தி…..
உலகக் கிண்ணத்தில் விளையாடும் நோக்கில் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்கும் மாலிங்க
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பிடிக்கும் நோக்குடன் இருப்பதால் இந்தப் பருவகாலத்திற்கான ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் ஆறு போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியினை தெரிவு செய்யும் நோக்குடன் மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை ஒழுங்கு செய்திருக்கின்றது. இந்த மாகாண அணிகள் இடையிலான தொடர், ஐ.பி.எல். தொடர் இடம்பெறும் ஒரே காலப்பகுதியில் இடம்பெறுகின்றது.
இங்கிலாந்து பிராந்திய கழகத்தில் திமுத் கருணாரத்ன விளையாடுவதில் சிக்கல்
இங்கிலாந்தின் உள்ளூர் கழகமான ஹெம்ஷையர் அணியுடன் விளையாடுவதற்கு கடந்த பெப்ரவரி மாதம் ஒப்பந்தம்
இப்படியாக இரு தொடர்களும் ஒரே காலப்பகுதியில் இடம்பெறுவதன் காரணமாகவே, பணம் கொழிக்கும் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் விளையாடும் சந்தர்ப்பத்தினை மாலிங்க இழக்கின்றார்.
“நான் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதற்கான சம்மதத்தினை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்த போதிலும் உலகக் கிண்ணத்தில் விளையாட விரும்பும் அனைத்து வீரர்களும் மாகாண தொடரில் இருக்க வேண்டும் எனக் கூறினர்.“
“எனவே, நான் அவர்களிடம் மாகாண அணிகளுக்கான தொடரில் விளையாட விருப்பம் எனக் கூறினேன். அத்தோடு (இலங்கை கிரிக்கெட்) சபையிடம் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும், ஐ.பி.எல். நிர்வாகத்திடமும் இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறும் தெரிவித்திருந்தேன். இது அவர்களது முடிவு என்பதால், எனக்கு ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இழப்பதில் பிரச்சினைகள் எதுவுமில்லை. நான் இதனை எனது நாட்டுக்காக செய்கின்றேன்“ என மாலிங்க கூறினார்.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வாவும் லசித் மாலிங்க, மாகாண அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரில் விளையாடுவது தொடர்பில் வெளிப்படையான விருப்பம் ஒன்றில் இருப்பதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
இலங்கை அணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தலைவராக இருக்கும் லசித் மாலிங்க, நான்கு அணிகள் பங்குபெறும் மாகாண ஒரு நாள் தொடரில் காலி அணியின் தலைவராக செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக கடந்த காலங்களில் இருந்து வந்த லசித் மாலிங்க, 2018ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடாத போதிலும் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்ட காரணத்தில் கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற மாகாண அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை.
கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த 20 வயதுடைய இங்கிலாந்து வீரர்
டுபாயில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் போட்டியில் சர்ரே கழக அணி வீரர் வில் ஜெக்ஸ் 25 பந்துகளில் சதமடித்து
தொடர்ந்து இலங்கை அணிக்கு திரும்பிய மாலிங்க, சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதனால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினால் மீண்டும் பந்துவீச்சாளராக விளையாடுவதற்கு வீரர்கள் ஏலம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். எனினும், அவர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக பங்கெடுக்கும் நோக்கத்தில் இருப்பதால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஆட பெரிய விருப்பம் ஒன்றை காட்டவில்லை என்பது போலத் தெரிகின்றது.
“நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது (இம்முறைக்கான ஐ.பி.எல் தொடரில்) ஏழு அல்லது எட்டு போட்டிகளில் விளையாடமல் முடியாமல் இருக்கும்“
“எனவே, அவர்கள் (மும்பை இந்தியன்ஸ்) அணியினர் எனக்காக காத்திருப்பதில் எந்த அர்த்தங்கள் ஏதுமில்லை என்றே எண்ண முடிகின்றது. அவர்கள் எனக்கு பதிலாக வேறு ஒரு வீரரை எடுத்தால் நன்றாக இருக்கும்“ என லசித் மாலிங்க பேசினார்.
கடந்த ஆறு மாதங்களாக இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கொண்ட போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ள மாலிங்க உலகக் கிண்ணத்திற்கான அணியில் இணைவது இலங்கையின் பந்துவீச்சுத்துறைக்கு பெறுமதி சேர்க்கும் விடயமாக அமையும் என கருதப்படுகின்றது.
ஐ.பி.எல். தொடரில் 19.01 என்ற சராசரியோடு இதுவரையில் மொத்தமாக 154 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கும் லசித் மாலிங்க, இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க