மும்பை அணியில் மீண்டும் விளையாடவுள்ள லசித் மாலிங்க

240

2020ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தையொட்டி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பதினொரு வருடங்களாக விளையாடிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவை தக்கவைத்துக் கொள்ள அந்த அணி தீர்மானித்துள்ளது.

இதேநேரம், நான்கு தடவைகள் .பி.எல் சம்பியனாகத் தெரிவாகிய மும்பை அணி, இம்முறை தமது அணியில் இருந்து 12 வீரர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், கடந்த வருடம் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதற்கு காரணமாக இருந்த 18 வீரர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளது

.பி.எல் தொடரின் 2020ஆம் ஆண்டின் பருவத்துக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு எட்டு அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற அணிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு கடந்த 14ஆம் திகதி முடிவடைந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (15) எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது மற்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதில் .பி.எல் தொடங்கிய காலத்திலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு வீரரான லசித் மாலிங்கவை தொடர்ந்து அந்த அணியுடன் தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த வருடம் .பி.எல் தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த லசித் மாலிங்கவின் உடல் தகுதி குறித்து அதிக அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள மாலிங்க

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா…

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான 36 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார்

அதிலும் குறிப்பாக, .பி.எல் போட்டிகளில் கடந்த 11 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய லசித் மாலிங்க கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தடவையாக அவ்வணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தொடர் உபாதை மற்றும் அவரது பந்துவீச்சு பலம் குன்றியிருந்தமை என்ற காரணங்களால் 2018ஆம் ஆண்டில் அவரை எந்த ஐ.பி.எல். அணியும் ஏலத்தில் எடுப்பதற்கு முன்வரவில்லை. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மாலிங்க செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் இலங்கை அணியில் இணைந்த மாலிங்க, கடந்த வருடம் சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்

முக்கியமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் மாலிங்கவின் மீள்வருகை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவரின் பந்து வீச்சு என்பன அனைவரையும் ஈர்த்திருந்தது. அத்துடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளையும் மாலிங்க வீழ்த்தியிருந்தார்.

இவ்வாறு திறமைகளை வெளிப்படுத்தி வந்த மாலிங்க ஒருவருட இடைவேளைக்குப் பின்னர் இவ்வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டார்.

2009ஆம் ஆண்டு முதல் .பி.எல் போட்டிகளில் விளையாடி வருகின்ற மாலிங்க, 150 .பி.எல் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை 2018ஆம் ஆண்டில் நிகழ்த்தியிருந்தார்

அத்துடன், 2011ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக தனது சிறந்த .பி.எல் பந்துவீச்சைப் பதிவு செய்த மாலிங்க, 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், இவ்வருடம் 12 .பி.எல் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மாலிங்க, இதுவரை 122 .பி.எல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இம்முறை .பி.எல் ஏலத்திற்கு முன் முக்கியமான சில வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்திருந்ததுடன், ஒரு சில முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களை வீரர்கள் பரிமாற்றத்தின் அடிப்படையில் உள்வாங்கியது.

ஆரம்பத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, உலகின் சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளரும், உலகின் மின்னல் வேக பந்துவீச்சாளர்களில் ஒருவருமான ட்ரென்ட் போல்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்தது.

அதனையடுத்து ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான குல்கர்னி 75 இலட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.

அத்துடன், டெல்லி அணியின் அதிரடி வீரராக விளங்கிய மேற்கிந்திய தீவுகளின் ஷெபார்னே ருதர்போர்ட் 6.2 கோடிக்கு அடுத்த பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடவுள்ளார்.

இரட்டைச் சதங்களில் பிராட்மனை முந்திய மயங்க் அகர்வால்

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான…

இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த மயங்க் மார்கண்டே அடுத்த சீசனில் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார்

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சித்தேஷ் லாட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்: 1. யுவராஜ் சிங், 2. எவின் லுவிஸ், 3. ஆடம் மில்னே, 4. ஜேசன் பெரெண்டர்ஃப், 5. பரிந்தர் சரண், 6. பென் கட்டிங், 7. பங்கஜ் ஜெய்ஸ்வால்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<