மலிங்கவிற்கு பதிலாக டெய்லர்

583
Jerome Taylor

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான, இலங்கை அணியைச் சேர்ந்த லசித் மலிங்க காயம் காரணமாக 9வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பி இருந்தார்.

அதன் பின் இடம்பெற்ற மருத்துவப் பரிசோதனையின்படி மலிங்கவிற்கு 3 மாதகால ஓய்வு வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.இந்நிலையில் ஐ.பி.எல் இலிருந்து விலகிய மலிங்கவிற்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜெரோம் டெய்லர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

கடந்தகால ஐ.பி.எல் போட்டித் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் லசித் மலிங்கவே.  இவர் நீண்ட நாட்களாக முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரிலும் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், காயம் அடைந்த மலிங்கவிற்கு பதிலாக ஜெரோம் டெய்லரை மும்பை அணியில் இணைக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்