நியூசிலாந்து கழகத்தில் இயக்குநராகும் முன்னாள் இலங்கை வீரர்

Johnsonville Cricket Club Coaching Staff

356
Malinda Warnapura given a coaching role

நியூசிலாந்தின் ஜொன்சன்வில் கிரிக்கெட் கழகத்தின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் மலிந்த வர்ணபுர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி 3ஆம் நிலை அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளரான மலிந்த, ஜொன்சன்வில் கிரிக்கெட் கழகத்தின் முதலாவது முழுநேர பயிற்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநராக 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் பல்வேறு பயிற்சியாளர் பதவிகளை வகித்த இவர், அண்மையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றினார்.

44 வயதான மலிந்த வர்ணபுர 14 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<