இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 24 முதல்தர கழகங்கள் பங்குபற்றுகின்ற டி-20 கிரிக்கெட் தொடரின் இன்று (15) மாலை நடைபெற்ற போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம், இலங்கை இராணுவ கழகம், காலி கிரிக்கெட் கழகம், சோனகர் கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகம் உள்ளிட்ட அணிகள் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருந்தன.
களுத்துறை நகர கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில், அனுபவ வீரர் அஷான் பிரயஞ்சனின் அரைச்சதத்தின் உதவியுடன் கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் களுத்துறை கழகத்தை வீழ்த்தியது.
மேஜர் T20 லீக்கில் அதிரடியை வெளிக்காட்டிய சதீர, சானக மற்றும் அவிஷ்க
இலங்கையில் உள்ள முன்னணி 24 கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான…
முதலில் துடுப்பாடிய களுத்துறை கழகம் சார்பாக நிபுன கமகே அரைச்சதம் கடந்து 57 ஓட்டங்களைப் பெற்றாலும், அஷான் பிரயஞ்சன் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 58 ஓட்டங்களுடன் கொழும்பு கழகம் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
போட்டியின் சுருக்கம்
களுத்துறை நகர கழகம் – 134/6 (20) – நிபுன கமகே 57, எரங்க ரத்னாயக்க 27, சச்சித்த ஜயதிலக்க 26*, லஹிரு கமகே 3/21, மாலிந்த புஷ்பகுமார 3/13
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 135/2 (15.2) – அஷான் பிரியஞ்சன் 58*, மாதவ வர்ணபுர 48, டில்ஷான் முனவீர 23
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
Photos: CCC v Kalutara TC – Major T20 Tournament 2018/19
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாமர சில்வாவின் அரைச் சதத்தின் உதவியுடன் சோனகர் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவுசெய்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ப்ளூம்பீல்ட் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம், 13.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. அனுபவ வீரர் சாமர சில்வா 37 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
Photos: Moors SC v Bloomfield C & AC – Major T20 Tournament 2018/19
போட்டியின் சுருக்கம்
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 106/9 (20) – அசங்க சிங்கப்புலி 39, அசந்த பிரேமரத்ன 13, சிரான் பெர்னாண்டோ 2/16, அதீஷ திலன்சன 2/21, நிமன்த மதுஷங்க 2/23
சோனகர் விளையாட்டுக் கழகம் – 107/2 (13.1) – சாமர சில்வா 60*, பபசர வதுகே 30*, அன்ட்ரூ பராய்ஸ் 2/30
முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
யாழ் மத்திய கல்லூரியில் கலாநிதி எதிர்வீரசிங்கம் பெயரில் புதிய பார்வையாளர் அரங்கு
இரு நுற்றாண்டு கடந்த வரலாற்றினைக் கொண்டிருக்கும் வடக்கின்…
BRC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
பனாகொட மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியிருந்த காலி கிரிக்கெட் கழகம், BRC கழகத்தை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.
போட்டியின் சுருக்கம்
BRC – 83 (16.2) – ருமேஷ் புத்திக 25, தேவிந்த பத்மநாதன் 18, கயான் சிறிசோம 3/22, ரஜித் பிரியன் 3/23, அகலங்க கனேகம 2/9
காலி கிரிக்கெட் கழகம் – 87/2 (11.5) – லக்ஷான் ரொட்ரிகோ 58, நிசல் ரன்திக 19
முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் கிரிக்கெட் கழகம்
குருநாகல் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டடியில், இராணுவ கிரிக்கெட் கழகம் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இராணுவ கழகம் நிர்ணயித்த 130 ஓட்டங்களை நோக்கிய துடுப்பாடிய குருநாகல் கழகம், 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
போட்டியின் சுருக்கம்
இராணுவ கிரிக்கெட் கழகம் – 130 (20) – ரன்ஜிக ரித்ம 34, அசேல குணரத்ன 21, ஜானக சம்கத் 17, தினூஷ மாலன் 4/18, சந்திம விஜயபண்டார 3/26
குருநாகல் கிரிக்கெட் கழகம் – 104 (17.1) – தனுஷ்க தர்மசிறி 30, அனுருத்த ராஜபக்ஷ 26, துஷான் விமுக்தி 4/21, சீக்குகே பிரசன்ன 2/16, ஜனித் சில்வா 2/20
முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 26 ஓட்டங்களால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்
கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியை, அபார பந்துவீச்சின் மூலமாக தமிழ் யூனியன் கழகம் வெற்றி கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழகம் 160 ஓட்டங்களைப் பெற்றதுடன், கண்டி சுங்க கழகத்தை 95 ஓட்டங்களுக்கு சுருட்டியது.
Photos: Tamil Union C & AC vs Kandy Customs | Major T20 Tournament 2018/19
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 160/9 (20) – ஜீவன் மெண்டிஸ் 35, ரமித் ரம்புக்வெல்ல 30, மனோஜ் சரத்சந்திர 19,
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 95 (16.2) – ரமித் ரம்புக்வெல்ல 3/8, ஜீவன் மெண்டிஸ் 3/22
முடிவு – தமிழ் யூனியன் கழகம் 65 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க