இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் முதல்தர கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் (50) கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று 11 போட்டிகள் நிறைவடைந்தன.
அறிமுக வீரர் ஓசதவின் துடுப்பாட்டத்தை புகழ்ந்த லசித் மாலிங்க
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ……
பொலிஸ் விளையாட்டு கழகம் எதிர் BRC
BRC அணி மற்றும் பொலிஸ் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் BRC அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்தது.
அண்மையில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்த மொஹமட் சிராஸ் BRC அணியின் வெற்றிக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவினார்.
போட்டியின் சுருக்கம்
பொலிஸ் விளையாட்டு கழகம் – 188 (44) கிடான்ஸ் கேரா 42, சனத் ரஞ்சன் 33, மொஹமட் சிராஸ் 5/40
BRC – 189/7 (36.1) தேஷான் டயஸ் 74, ரூமேஷ் புத்திக்க 34, மஞ்சுல ஜயவர்த்தன 3/30
முடிவு – BRC அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி
அறிமுக வீரர் ஓசதவின் துடுப்பாட்டத்தை புகழ்ந்த லசித் மாலிங்க
புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டு கழகம்
புளூம்பீல்ட் அணியின் சொந்த மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில், பாணந்துறை அணி அஜித் குமாரவின் அரைச்சதத்தோடு (58) மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டிச் சுருக்கம்
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 270/7 (50) சனோஜ் தர்ஷிக்க 57, மதுசன் ரவிச்சந்திரகுமார் 50, அசன்த சிங்கபுலி 46, நவீன் கவிகார 2/39, வினோத் பெரேரா 2/43
பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 275/7 (50) அஜித் குமார 58, மிஷென் சில்வா 35, சனோஜ் தர்சிக்க 3/42, அரவிந்த பிரேமரத்ன 2/22
முடிவு – பாணந்துறை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
கோல்ட்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் கோல்ட்ஸ் அணியை 3 விக்கெட்டுக்களால் பதுரெலிய அணியினர் தோற்கடித்தனர்.
பதுரெலிய அணியின் வெற்றிக்கு கோசல குலசேகர 74 ஓட்டங்களுடன் உதவ, சசித் பத்திரன 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 220 (47.3) விசாத் ரண்திக்க 65, சதீர சமரவிக்ரம 51, சசித் பத்திரன 5/37, புத்திக்க சஞ்சீவ 3/43
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 224/7 (43) கோசல குலசேகர 74*, சசித் பத்திரன 37, ஜெஹான் டேனியல் 3/43, நிபுன் ரன்சிக்க 2/22
முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் கொழும்பு அணி, களுத்துறை வீரர்களை 8 ஓட்டங்களால் தோற்கடித்தது.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 234 (49.3) மதவ்வ வர்ணபுர 67, டில்சான் முனவீர 66, எரங்க ரத்னாயக்க 4/27, பசிந்து மதுஷான் 3/49, மதீஷ பெரேரா 2/37
களுத்துறை நகர கழகம் – 226/9 (50) எரங்க ரத்னாயக்க 73, நிபுன கமகே 49, மதீஷ பெரேரா 32, வனின்து ஹஸரங்க 4/64, மலிந்த புஷ்பகுமார 3/44
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 ஓட்டங்களால் வெற்றி
டு ப்ளெசிஸின் சதத்துடன் தென்னாபிரிக்க அணிக்கு இலகு வெற்றி
சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டு கழகம்
வெலிசறவில் இடம்பெற்ற இப்போட்டியில் சோனகர் கிரிக்கெட் கழகம், அயன சிறிவர்த்தன பெற்றுக்கொண்ட அபார சதத்துடன் (105*) 12 ஓட்டங்களால் வெற்றியினை சுவைத்து.
போட்டியின் சுருக்கம்
சோனகர் கிரிக்கெட் கழகம் – 319/7 (50) அயன சிறிவர்த்தன 105*, சாமர சில்வா 63, டிலான் சந்திம 2/35
கடற்படை விளையாட்டுக் கழகம் – 307/9 (50) துஷான் ஹேமன்த 87, தருஷன் இட்டமல்கொட 61, டிலான் சந்திம 53, சலித பெர்னாந்து 50, அதீஷ திலன்ச்சன 2/38
முடிவு – சோனகர் கழகம் 12 ஓட்டங்களால் வெற்றி
செரசன்ஸ் விளையாட்டு கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
மக்கொன சர்ரேய் மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் செரசன்ஸ் அணி 25 ஓட்டங்களால் லங்கன் கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியது.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டு கழகம் – 181 (47) மிலிந்த சிறிவர்த்தன 59, என்டி சோலமன்ஸ் 20, சானக்க தேவிந்த 4/26, துலஞ்சன மெண்டிஸ் 3/26
லங்கன் கிரிக்கெட் கழகம் – 156 (48.2) சிப்ரான் முத்தலீப் 39, என்டி சோலமன்ஸ் 3/24, சாமிகர எதிரிசிங்க 2/29
முடிவு – செரசன்ஸ் விளையாட்டு கழகம் 25 ஓட்டங்களால் வெற்றி
இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம்
பானகொடவில் இப்போட்டியில் இராணுவப்படை அணி அசேல குணரத்ன (59) மற்றும் சீக்குகே பிரசன்ன (62) போன்ற வீரர்களின் அரைச்சதத்தோடு 33 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்தது.
போட்டியின் சுருக்கம்
இராணுவப்படை விளையாட்டு கழகம் – 310/9 (50) துஷான் விமுக்தி 79, சீக்குகே பிரசன்ன 62, அசேல குணரத்ன 59, சம்பத் பெரேரா 3/50, உமேஷ் சத்துரங்க 3/64
விமானப்படை விளையாட்டு கழகம் – 277 (44) சுமிந்த லக்ஷான் 45, ரொஸ்கோ தட்டில் 44, அசேல குணரத்ன 3/38, சஞ்சிக்க ரித்ம 2/15
முடிவு – இராணுவப்படை விளையாட்டு கழகம் 33 ஓட்டங்களால் வெற்றி
உத்திகளிளை மாற்றியதே சிறந்த ஆட்டத்திற்கு காரணம்: திசர பெரேரா
றாகம கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்
தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் றாகம அணி தினேத் திமோத்யவின் சதத்தோடு (127) 194 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்தது.
போட்டியின் சுருக்கம்
றாகம கிரிக்கெட் கழகம் – 332/3 (50) தினேத் திமோத்ய 127, ரொஷேன் சில்வா 63*, சமீர டி சொய்ஸா 63, ஜனித் லியனகே 51*
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 138 (35.2) சஹான் ஆராச்சிகே 63*, நிஷான் பீரிஸ் 2/22, அமில அபொன்சோ 2/22
முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 194 ஓட்டங்களால் வெற்றி
குருநாகல் இளையோர் விளையாட்டு கழகம் எதிர் SSC
இப்போட்டியில் குருநாகல் இளையோர் அணியினை சச்சித்ர சேனநாயக்கவின் அபார பந்துவீச்சோடு SSC அணி 8 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.
போட்டியின் சுருக்கம்
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 78 (34.5) சச்சித்ர சேனநாயக்க 4/09, தம்மிக்க பிரசாத் 2/12
SSC – 79/2 (11.3) கெளசால் சில்வா 39*
முடிவு – SSC அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
கண்டி சுங்க விளையாட்டு கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ்
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் கண்டி கஸ்டம்ஸ் அணியினை இலகுவாக தோற்கடித்தது.
போட்டியின் சுருக்கம்
கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 76 (33.5) சுமேத திஸநாயக்க 30, நிமேஷ் விமுக்தி 3/12, திக்ஷில டி சில்வா 2/14, டில்சான் சஞ்சீவ 2/15
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 79/2 (9.2) யசோதா லங்கா 42, சுமேதா திஸநாயக்க 2/14
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
காலி கிரிக்கெட் கழகம் எதிர் NCC
NCC அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் காலி கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.
போட்டியின் சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் – 82 (25.2) அகலன்க கனேகம 23, அசித்த பெர்னாந்து 5/32, திலேஷ் குணரட்ன 2/14, சசிந்த கொலம்பகே 2/24
NCC – 86/1 (17.4) ஹசித பொயகொட 42*, பெதும் நிசங்க 33*
முடிவு – NCC அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<