NCC அணியை 38 ஓட்டங்களுக்கு சுருட்டிய கோல்ட்ஸ் கழகம்

272

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 23 வயதுக்குட்பட்ட கழக கிரிக்கெட் வீரர்களுக்காக நடாத்தும் மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடரி்ல் இன்று (4) மொத்தமாக 11 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் துடுப்பாட்டத்தை நோக்கும் போது, நிபுன் தனஞ்சய SSC அணிக்காக சதம் (100) விளாசியிருந்தார். நிபுன் தனஞ்சயவின் சதத்தோடு SSC அணி, புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியில் 67 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்தது. ஆனால், இடதுகை பந்துவீச்சாளரான திலிப ஜயலத் புளூம்பீல்ட் அணிக்காக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவரின் பந்துவீச்சு வீணானது.

தீவிரவாத குண்டுத் தாக்குதலால் உயிரிழந்த ஆப்கான் நடுவர்

இதேநேரம், இன்றைய நாளில் பெறப்பட்ட இரண்டாவது சதத்தினை விளாசிய வீரராக சிலாபம் மேரியன்ஸ் அணியின் சனோஜ் தர்ஷிக்க மாறினார். அதன்படி, சனோஜ் தர்ஷிக்க ஆட்டமிழக்காமல் பெற்ற 100 ஓட்டங்களுடன் சிலாபம் மேரியன்ஸ் அணி, விமானப்படை விளையாட்டுக் கழகத்தினை 43 ஓட்டங்களால் தோற்கடித்தது.

மறுமுனையில், மிகப் பெரிய துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றினை சந்தித்த NCC அணி, கோல்ட்ஸ் அணிக்கு எதிரான மோதலில் 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. எதரணி வீரர்களை புரட்டிய கோல்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் தனன்ஞய லக்ஷான் 4 விக்கெட்டுக்களையும், நிப்புன் ரன்சிக்க 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். தொடர்ந்து, போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 38 ஓட்டங்களை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காமல் அடைந்தது.

இதேவேளை, இன்றைய நாளுக்கான போட்டிகளில் பதுரெலிய கிரிக்கெட் கழகம், சோனகர் கிரிக்கெட் கழகம், BRC, றாகம கிரிக்கெட் கழகம், பாணதுறை விளையாட்டுக் கழகம் ஆகியவையும் வெற்றிகளை பதிவு செய்த அணிகளாக மாறியிருந்தன.

போட்டிகளின் சுருக்கம்

பொலிஸ் வி.க எதிர் பதுரெலிய கி.க.

சர்ரேய் மைதானம், மக்கோன

பொலிஸ் வி.க. – 157/9 (31) – ரெசந்து 30, ரசன்ஜன சில்வா 38/4

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 161/5 (29) – துனித் ஜயதுங்க 56, ரனேஷ் சில்வா 40*, நிமேஷ் மெண்டிஸ் 38/2

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரில் சமரி, சசிகலா பங்கேற்பு

NCC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு

NCC – 37 (15.5) – தனன்ஞய லக்ஷான் 9/4, நிப்புன் ரன்சிக்க 9/3

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 38/0 (6.2)

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுக்களால் வெற்றி


சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

மத்தேகொட, கொழும்பு

சோனகர் கிரிக்கெட் கழகம் – 179 (38) – கவிஷ்க அஞ்சுல 60, லஷான் சில்வா 41/3

களுத்துறை நகர கழகம் – 167/9 (38)  – லசிந்து ஆரோஷன 29, அயன சிறிவர்தன 29/3, நதீஷ விக்ரமநாயக்க 34/3

முடிவு – சோனகர் கிரிக்கெட்  கழகம் 12 ஓட்டங்களால் வெற்றி 


இராணுவப்படை எதிர் BRC

பாணகொடை, கொழும்பு 

இராணுவப்படை வி.க – 147 (38.1) – ஷெஹான் பெர்னாந்து 39, ஹிரந்த ஜயசிங்க 23/4, கெவின் கொத்திகொட 44/3

BRC – 150/6 (27.4) – யெசித் ரூபசிங்க 52

முடிவு – BRC விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி 


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் விமாப்படை வி.க

மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க 

சிலாபம் மேரியன்ஸ் – 261/7 (50) – சனோஜ் தர்ஷிக்க 100*, கசுன் ஏக்கநாயக்க 58/3

விமானப்படை வி.க. – 215 (49.1) – சபிக் இப்தாரி 62, சுகங்க 58, ரமேஷ் டி சில்வா 22/3

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 46 ஓட்டங்களால் வெற்றி

போட்டியின் போது இருமிக்கொண்டிருந்தது ஏன்..?: டோனி விளக்கம்

செபாஸ்டினைட்ஸ் வி.க. எதிர் நுகேகொட வி.க.

டி சொய்ஸா மைதானம், மொரட்டுவ

செபஸ்டியனைட்ஸ் வி.க. – 211 (49.3) – மலிந்து உத்பல 57, முதித லக்ஷான் 37/3

நுகேகொட வி.க. – 193 (46.2) – நிபுன் லக்ஷான் 53, பிரவீன் கூரே 35/3

முடிவு – செபஸ்டினையட்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றி


கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 

வெலகெதெர மைதானம், குருநாகல்

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 109 (43.5) – ரஷ்மிக்க 37, நிபுன் பண்டார 18/3

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 111/2 (25.4) – கேஷான் 58, அசித்த வன்னிநாயக்க 40*

முடிவு – குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி 


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம் 

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 236 (49.3) – டிமுத் சந்தருவன் 56, சஞ்சுல பண்டார 33/3, சஷிக்க துல்ஷான் 47/3

றாகம கிரிக்கெட் கழகம் – 237/9 (49.5) – மனிஷ ரூபசிங்க 65, சித்தும் அகிலங்க 35/5

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட்டினால் வெற்றி


பாணதுறை வி.க. எதிர் லங்கன் கி.கி.

பாணதுறை, களுத்துறை

பாணதுறை வி.க. – 127 (38.4) – பசிந்து பதும் 20, யசிரு ரொட்ரிகோ 16/3, துனித் வெலால்கே 38/3

லங்கன் கிரிக்கெட் கழகம் – 128/4 (14.3) – விஷ்வ சத்துரங்க 75

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

ஐ.பி.எல் வரலாற்று சாதனையை முறியடித்த எம்.எஸ் டோனி

SSC எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

SSC மைதானம், கொழும்பு

SSC – 257/9 (50) – நிபுன் தனஞ்சய 100, சமிந்து 53, டிலிப ஜயலத் 44/5

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 190/7 (50) – வினுஜ ரன்புல் 75*, கவிந்து நதீஷன் 31/2

முடிவு – SSC அணி 67 ஓட்டங்களால் வெற்றி


காலி கிரிக்கெட் கழகம் எதிர் CCC

CCC மைதானம், கொழும்பு

காலி கிரிக்கெட் கழகம் – 181 (48) – வினுர துல்சார 70, பவன்த வீரசிங்க 26/3

CCC – 185/3 (24.5) – சொனால் தினுஷ 61, மலிந்து மதுரங்க 50

முடிவு – CCC அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<