இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங் லீக் (Major Emerging League) இரண்டு நாட்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் இன்று (09) இரண்டு போட்டிகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் சமநிலையில் நிறைவுக்கு வந்தன.
இதில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய ஹசித போயகொட NCC கழகத்திற்காகவும், துலின டில்ஷான் இராணுவப்படை கழகத்துக்காகவும் சதமடித்து அசத்தியிருந்தனர்.
NCC எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்
NCC மைதானத்தில் சமநிலையில் நிறைவடைந்த இப்போட்டியில் சொந்த மைதான வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தனர்.
போட்டியில் முதலில் துடுப்பாடிய NCC கழகத்திற்காக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் நட்சத்திர வீரர் ஹசித போயகொட 131 ஓட்டங்களையும், லஹிரு உதார 58 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.
எமர்ஜிங் மேஜர் லீக் தொடரில் பிரகாசித்த தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள்
இதன்படி, அந்த அணி 53.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் பந்துவீச்சில் நிபுன லக்ஷான், தரூஷ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
எனினும், போட்டியின் இரண்டாவது நாளான இன்றைய தினம் தொடர்ந்து நிலவிய சீரற்ற காலநிலையால் போட்டியை நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக ஆட்டம் சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
NCC கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 295/6d (53.4) – ஹசித போயகொட 131, லஹிரு உதார 58, அஞ்சலோ பெரேரா 26, சமித ரங்க 26, மாலிங்க அமரசிங்க 23, சச்சின்த பீரிஸ் 20, நிபுன லக்ஷான் 2/45, தரூஷ பெர்னாண்டோ 2/64
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் லங்கா கிரிக்கெட் கழகம்
மத்தெகொட செப்பர்ஸ் மைதானத்தில் நேற்று (08) ஆரம்பமான இந்தப் போட்டி, மழையினால் 22 ஓவர்கள் மாத்திரம் பந்துவீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. எனினும், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
காலி டெஸ்ட்டில் இலங்கை அணி படுதோல்வி
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை…
இதுஇவ்வாறிருக்க, போட்டியின் இரண்டாவது நாளான இன்றும் போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த போதிலும் 29 ஓவர்கள் மாத்திரம் விளையாடப்பட்டு போட்டி சமநிலை அடைந்தது.
இந்த ஓவர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இராணுவப்படை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் துலின டில்ஷான் சதம் (111) அடித்து அசத்தினார்.
போட்டியின் சுருக்கம்
இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 185/5d (50.5) – துலின டில்ஷான் 111, ஹிமாஷ லியனகே 27, அஜித் ராஜபக்ஷ 27, சானக்க தேவிந்த 2/24
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க