இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங் லீக் (Major Emerging League) இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (14) ஏழு போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
இதில் 19 வயதுக்குட்பட்ட நீல நிற அணிக்கு எதிரான போட்டியில், மதுக லியனபத்திரனகேயின் அபார பந்துவீச்சு உதவியுடன் பி.ஆர்.சி கழகம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஏனைய அனைத்துப் போட்டிகளும் சமநிலையில் முடிவுற்றன.
புனித பேதுரு கல்லூரிக்காக சகல துறைகளிலும் அசத்திய சந்துஷ்
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ் பாடசாலை…
இதேநேரம், தேசிய அணி வீரரான சச்சித் பத்திரன, பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்காக சதமடித்து அசத்தியதுடன், இளம் வீரர்களான கமிந்து மெண்டிஸ், சமிந்து விஜேசிங்க, தேன் டயஸ் ஆகியோர் சதங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
19 வயதின் கீழ் நீலம் அணி எதிர் பி.ஆர்.சி கழகம்
பி.ஆர்.சி மைதானத்தில் நேற்று (13) ஆரம்பமாகிய இப்போட்டியில் மதுக லியனபத்திரனகே இரண்டு இன்னிங்ஸ்களிலும் பெற்ற 9 விக்கெட்டுக்கள் மற்றும் தேஷான் டயஸின் சதம் என்பவற்றினால் பி.ஆர்.சி அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியின் சுருக்கம்
19 வயதின் கீழ் நீலம் அணி (முதல் இன்னிங்ஸ்) 201/10 (58) – உமயங்க சுவாரிஸ் 47, ரவிந்து ரஷாந்த 47, சந்துன் மெண்டிஸ் 34, அவிஷ்க பெரேரா 22, மதுக லியனபத்திரனகே 5/52, துவிந்த திலகரத்ன 2/41, மொஹமட் சிராஸ் 2/54
பி.ஆர்.சி கழகம் (முதல் இன்னிங்ஸ்) 264/10 (55.2) – தேஷான் டயஸ் 109, ரமிந்த விஜேசூரிய 59, நிமன்த குணசிறி 35, லசித் லக்ஷான் 29, ரொஹான் சன்ஜய 4/56, நிபுன் தனன்ஜய 3/22, லக்ஷான் கமகே 2/36
19 வயதின் கீழ் நீலம் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) 173/10 (47.4) – நிபுன் தனன்ஞய 42, உமயங்க சுவாரிஸ் 25, சந்துன் மெண்டிஸ் 24, ரவிந்து ரஷாந்த 23, மதுக லியனபத்திரனகே 4/61, துவிந்து திலகரத்ன 3/36, மொஹமட் சிராஸ் 2/38
பி.ஆர்.சி கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 111/4 (13.3) – ரமிந்த விஜேசூரிய 31*, டேஷான் டயஸ் 30, மதுக லியனபத்திரன 29* டில்ஷான் மதுஷ்க 2/26
முடிவு – பி.ஆர்.சி கழம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி
“எமது திட்டத்தை விடவும் இங்கிலாந்து அணி அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளது” ; மலிந்த புஷ்பகுமார
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…
பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் காலி கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பதுரெலிய கிரிக்கெட் கழக வீரர்கள் முழு ஆதிக்கத்தினையும் வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் ஆட்டம் சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 332/8d (715) – சச்சித் பத்திரன 102, நதீர நாவல 88, லஹிரு சமரகோன் 37, சாலிந்த உஷான் 31, பெதும் மதுஷங்க 23, ரஜித ப்ரியன் 2/48
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 179/10 (51.4) – சமீன் கந்தனாரச்சி 71, அகலங்க கனேகம 38, லஹிரு சமரகோன் 4/35, சிரான் ரத்னாயக்க 3/14, நுவன் துஷார 2/29
பதுரெலிய கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 62/2d (11) – சலிந்து உஷான் 23*, சச்சித பத்திரன 23
காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 136/5 (36) – சமீன் கந்தனாரச்சி 47, ஷசிக்க டுல்ஷான் 22*, லஹிரு சமரகோன் 4/41
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
நேற்று (13) பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகி இன்று சமநிலையில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் ரொஸ்கோ தட்டில் ஆகியோர் சகல துறையிலும் பிரகாசித்தனர்.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 249/10 (78.5) – கமிந்து மெண்டிஸ் 107, தமித சில்வா 32, தரங்க பரணவிதாரன 32, லஹிரு மிலன்த 24, ரவிந்து சன்ஜன 4/67, ரொஸ்கோ தட்டில் 2/16
விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 246/10 (78.5) – ரொஸ்கோ தட்டில் 48, சாமிகர ஹேவகே 37, சன்ஜு ஜயசேகர 35, திலங்க உதேஷhன 3/36, தினுக் விக்ரமநாயக்க 2/27, கமிந்து மெண்டிஸ் 2/60
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 11/4 (5.4) – ரொஸ்கோ டெட்டில் 3/02
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
எமர்ஜிங் லீக் தொடரில் பந்துவீச்சில் பிரகாசித்த சமோத், சதுர மற்றும் கயான்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும்…
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் 19 வயதின் கீழ் சிவப்பு அணி
சோனகர் கிரிக்கெட் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராகம வீரர்கள் முதல் இன்னிங்சில் சொதப்ப, எதிரணிக்காக சமிந்து விஜேசிங்க சதம் கடந்தார்.
எனினும், ராகம அணியினர் இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த போட்டி சமநிலையடைந்தது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 182/10 (51.4) – தினெத் ஹேவதன்த்ரி 77, நிஷான் பீரிஸ் 33, அலி கான் 24*, அஷேன் டேனியல் 5/52, அஷான் தில்ஹார 2/37
19 வயதின் கீழ் சிவப்பு அணி (முதல் இன்னிங்ஸ்) 308/10 (87.2) – சமிந்து விஜேசிங்க 116, திலும் சதீர 46, அஷான் தில்ஹார 29, முதித்த லக்ஷான் 26, பவன் ரத்னாயக்க 23, யுஷான் மலித் 4/78, சஹன் நாணயக்கார 4/95
ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 211/10 (52) – தினெத் ஹேவதன்த்ரி 37, ஷெஹான் பெர்னாண்டோ 32, சமிந்த பெர்ணான்டோ 28, திலும் சுதீர 3/67, முதித்த லக்ஷான் 2/15
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய லங்கன் கிரிக்கெட் கழகமும், பதிலுக்கு ஆடிய கோல்ட்ஸ் வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தப் போட்டியும் சமநிலையடைந்தது.
போட்டியின் சுருக்கம்
லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 245/10 (78.4) – சன்ஜுல அபேவிக்ரம 74, சிப்ரான் மொதாலிஸ் 53*, ஹிருன அபேவிக்ரம 41, ராஜு கயேஷான் 23, ஹர்ஷ ராஜபக்ஷ 5/17, கவிஷ்க அன்ஜுல 2/42
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 231/7 (64) – பசிந்து இசிர 70, ஹஷான் துமிந்து 52, சதீர சமரவிக்ரம 36, நிஷான் மதுஷ்க 32, துலன்ஜன மெண்டிஸ் 4/66, அயன்த டி சில்வா 2/58
லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 89/3 (24) – மதுரங்க சொய்ஸா 51*, நிஷல தாரக 2/06
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்கவைத்து ஓய்வு பெற்ற ஹேரத்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில்…
குருநாகல் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம்
குருநாகல் – வெலகெதர கிரிக்கெட் மைதானத்தில் நிறைவுற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
குருநாகல் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 197/10 (56.3) – துலாஜ் ரணதுங்க 50, சமீர சந்தமால் 27, ஜனிஷ்க தர்மசிறி 21, ரத்தார வித்தான 4/29, சானுக டில்ஷான் 2/39
சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 288/10 (86.1) – கேஷான் விஜேரத்ன 57, ரமேஷ் மெண்டிஸ் 51, அதீஷ திலன்ஜன 45, இரோஷ் சமரசூரிய 41, உமேஷ் கசுன் 31, இஷான் அபேசேகர 3/63, துசித டி சொய்ஸா 2/72
குருநாகல் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 175/5 (78) – சானுக டில்ஷான் 5/36
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
களுத்துறை நகர கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்
ப்ளூம்பீல்ட் கழக மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் களுத்துறை நகர கழகம் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றம் கண்டாலும் இரண்டாவது இன்னிங்ஸில் எழுச்சி காண, இந்த ஆட்டமும் சமநிலையடைந்தது.
போட்டியின் சுருக்கம்
களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) 99/10 (35.2) – ரவிந்து கொடித்துவக்கு 28, அன்ட்ரூ பெரிஸ் 4/19, இம்ரான் கான் 3/18, தரிந்து கருணாரத்ன 3/28
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 206/10 (69.4) – சச்சின் ஜயவர்தன 90, அன்ட்ரூ பெரிஸ் 29, கசுன் அபேநாயக்க 27, அரவிந்த ப்ரேமரத்ன 22, மதீஷ பெரேரா 3/56, கீதால் பெர்னாண்டோ 2/23, எரங்க ரத்னாயக்க 2/33
களுத்துறை நகர கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 218/10 (52.5) – கீத் பெரேரா 43, ரவிந்து சன்ஜய 29, மதீஷ பெரேரா 28, நிபுன கமகே 28, திலீப ஜயலத் 4/46, அரவிந்த ப்ரேமரத்ன 3/18
ப்ளூம்பீல்ட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 56/3 (15) – அசேல சிகேரா 28*
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க