இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங் லீக் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின், அரையிறுதிப் போட்டிகள் இன்று (21) ஆரம்பமாகின.
இதில் எஸ்.எஸ்.சி அணிக்காக சதுன் வீரக்கொடி சதமடித்தும், ஆகாஷ் சேனாரத்ன அரைச் சதம் கடந்தும் அசத்தியதுடன், தமிழ் யூனியன் அணிக்காக பினுர பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச் சதங்களை குவித்திருந்தனர்.
மேஜேர் எமர்ஜிங் லீக்கில் அசத்தும் சதீர சமரவிக்ரம
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும்…
எஸ்.எஸ்.சி எதிர் காலி கிரிக்கெட் கழகம்
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எஸ்.எஸ்.சி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி, அவ்வணி, சதுன் வீரக்கொடியின் அபார சதம் மற்றுமச் ஆகாஷ் சேனாரத்னவின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் சதுன் வீரக்கொடி, 104 ஓட்டங்களையும் ஆகாஷ் சேனாரத்ன 50 ஓட்டங்களையும் குவிக்க, பந்துவீச்சில் காலி அணியின் ரஜீவ வீரசிங்க 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி கிரிக்கெட் கழக அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் கெவின் கொத்திகொட ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும், ஹர்ஷ விதாரன ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்
நாளை போட்டியின் கடைசி நாளாகும்
போட்டியின் சுருக்கம்
எஸ்.எஸ்.சி (முதல் இன்னிங்ஸ்) 246/10 (54) – சதுன் வீரக்கொடி 104 ஆகாஷ் சேனாரத்ன 50, தரிந்து ரத்னாயக்க 28, ஹிமேஷ் ராமநாயக்க 25, ரஜீவ வீரசிங்க 5/63, கயான் சிறிசோம 2/46
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 106/3 (36) – கெவின் கொத்திகொட 47*, ஹர்ஷ விதான 22*, பவன் உதன்கமுவ 21
இலங்கை அணியில் சந்திமாலின் இடத்திற்கு தனுஷ்க குணத்திலக்க
உபாதைக்குள்ளான இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், இங்கிலாந்து…
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய 2ஆவது அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தமிழ் யூனியன் அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்த 253 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பெடுத்தாடத்தில் அசத்திய பினுர பெர்னாண்டோ 66 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.
நாளை போட்டியின் கடைசி நாளாகும்
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 253/7 (80) – பினுர பெர்னாண்டோ 66, கமிந்து மெண்டிஸ் 51, யொஹான் மெண்டிஸ் 47*, தரங்க பரனவிதாரண 34, ரமித் ரம்புக்வெல்ல 28, நலின் ப்ரியதர்ஷன 2/119