இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங் லீக் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின், அரையிறுதிப் போட்டிகள் இன்று (22) நிறைவுக்கு வந்தன.
மேஜர் லீக் அரையிறுயில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இளம் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜிங்……
குறித்த 2 போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த போதிலும், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட எஸ்.எஸ்.சி மற்றும் கோல்ட்ஸ் கழகங்கள் மேஜர் எமெர்ஜிங் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
எஸ்.எஸ்.சி எதிர் காலி கிரிக்கெட் கழகம்
கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி இன்று நிறைவுக்கு வந்த இந்தப் போட்டியில் எஸ்.எஸ்.சி அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் பிரகாசித்திருந்தது.
அந்த அணிக்காக, துடுப்பாட்டத்தில் சதுன் வீரக்கொடி சதம் கடந்து 104 ஓட்டங்களையும், ஆகாஷ் சேனாரத்ன 50 ஓட்டங்களையும் குவிக்க, முதல் இன்னிங்ஸிற்காக அவர்கள் 246 ஓட்டங்களைப் பெற்றனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பாடிய காலி கிரிக்கெட் கழகம், இளம் வீரர் கெவின் கொத்திகொட (62) மற்றும் ஹர்ஷ விதான (55) பெற்றுக்கொண்ட அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.எஸ்.சி பந்துவீச்சில் தரிந்து ரத்னாயக்க 4 விக்கெட்டுக்ளையும், ஆகாஷ் சேனாரத்ன 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து, 28 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாது இன்னிங்ஸை ஆரம்பித்த எஸ்.எஸ்.சி அணி, இன்றைய கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
Photos: Colts Vs Tamil Union | Premier Emerging League 2018/19 – Semi Finals
ThePapare.com | Viraj Kothalawala | 22/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be……
எனினும், முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.எஸ்.சி அணி, இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
எஸ்.எஸ்.சி (முதல் இன்னிங்ஸ்) 246/10 (54) – சதுன் வீரக்கொடி 104, ஆகாஷ் சேனாரத்ன 50, தரிந்து ரத்னாயக்க 28, ஹிமேஷ் ராமநாயக்க 25, ரஜீவ வீரசிங்க 5/63, கயான் சிறிசோம 2/46
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 218/10 (76) – கெவின் கொத்திகொட 62, ஹர்ஷ விதான 55, ரஜீவ் வீரசிங்க 29*, பவன் உதன்கமுவ 21, தரிந்து ரத்னாயக்க 4/77, ஆகாஷ் சேனாரத்ன 3/54
எஸ்.எஸ்.சி (இரண்டாவது இன்னிங்ஸ்) 178/5 (44.4) – பசிந்து சூரியபண்டார 49*, கவிந்து குலசேகர 46, க்ரிஷான் சன்ஜுல 44, சம்மு அஷான் 23, ரஜீவ் வீரசிங்க 2/13, ஷசிக்க துல்ஷான் 2/63
முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்
விஷாத் ரந்திக்க ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்ட அபார சதம் மற்றும் ஹஷான் துமிந்துவின் அரைச் சதத்தின் உதவியுடன் தமிழ் யூனியன் அணிக்கு எதிராக கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று, அதற்கான புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ் யூனியன் அணி, முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றது.
Photos: Galle CC Vs SSC | Premier Emerging League 2018/19 – Semi Finals
ThePapare.com | Viraj Kothalawala | 22/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be……
பந்துவீச்சில் கோல்ட்ஸ் கழகத்தின் நளின் ப்ரியதர்ஷன 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 284/10 (92) – யொஹான் மெண்டிஸ் 67, பினுர பெர்னாண்டோ 66, கமிந்து மெண்டிஸ் 51, தரங்க பரனவிதாரண 34, ரமித் ரம்புக்வெல்ல 28, நளின் ப்ரியதர்ஷன 5/128
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 312/8 (76) – விஷாத் ரந்திக்க 100*, ஹஷான் துமிந்து 56, சதீர சமரவிக்ரம 32, நிஷல தாரக்க 29, அவிஷ்க பெர்னாண்டோ 20, பசிந்து இசிர 20, அவிந்து தீக்ஷன 2/77, ரமித் ரம்புக்வெல்ல 3/65, லஹிரு மிலன்த 2/17
முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<