சரித் அசலங்கவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியோடு கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான, வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜர் எமர்ஜின் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் எஸ்.எஸ்.சி அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலைக்கான புள்ளிகளைப் பெற்று தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.
சரித் அசலங்கவின் சதத்தால் SSC வலுவான நிலையில்
சரித் அசலங்கவின் அபார சதத்தின் உதவியோடு கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட்….
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ந்துவரும் வீரர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (25) ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற எஸ்.எஸ்.சி அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணி, சரித் அசலங்கவின் அபார சதம் மற்றும் சந்துன் வீரக்கொடி, கவிந்து குலசேகரவின் அரைச் சதங்களின் உதவியுடன் 385 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அசத்திய அணித் தலைவர் சரித் அசலங்க சதம் கடந்து 115 ஓட்டங்களையும், சந்துன் வீரக்கொடி 84 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.
கோல்ட்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் மஹேஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.
55 வருட வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற….
துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 35 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் எஸ்.எஸ்.சி அணிக்காக தரிந்து ரத்னாயக்க மற்றும் ஆகாஷ் சேனாரத்ன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், அணித் தலைவர் சரித் அசலங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
>>Photos: SSC v Colts – Premier Emerging League 2018/19 – Finals | Day 02<<
முதல் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த எஸ்.எஸ்.சி அணி, இன்றைய கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
இதன் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷம்மு அஷான் 72 ஓட்டங்களை பெற்றார்.
இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.எஸ்.சி அணி தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.
போட்டியின் சுருக்கம்
எஸ்.எஸ்.சி அணி (முதல் இன்னிங்ஸ்) 385/8d (84.3) – சரித் அசலங்க 115, சந்துன் வீரக்கொடி 84, கவிந்து குலசேகர 67, கிரிஷான் சஞ்ஜுல 26*, மஹேஷ் தீக்ஷன 3/76, கவிஷ்“க அஞ்சுல 2/60, சலன டி சில்வா 2/94
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 197/10 (53.4) – அவிஷ்க பெர்னாண்டோ 35, சதீர சமரவிக்ரம 33, மஹேஷ் தீக்ஷன 27*, ஜெஹான் டேனியல் 23, ஹஷான் துமிந்து 21, தரிந்து ரத்னாயக்க 3/45, ஆகாஷ் சேனாரத்ன 3/68, சரித் அசலங்க 2/17
எஸ்.எஸ்.சி அணி (இரண்டாம் இன்னிங்ஸ் இன்னிங்ஸ்) 103/2 (19.3) – ஷம்மு அஷhன் 72, க்ரிஷான் சன்ஜுல 15*
முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<