சந்தகனின் போராட்டத்தினை தாண்டி இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன்

659
TAMIL UNION CRICKET CLUB

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்த, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் 16 ஓட்டங்களால் கொழும்பு கிரிக்கெட் கழகத்தினை வீழ்த்தியிருப்பதோடு, இராணுவப்படை அணியுடன் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டாவது அணியாகவும் மாறுகின்றது.

>> பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட்; முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த அரையிறுதி நேற்று (30) ஒழுங்கு செய்யப்பட்ட போதும், மைதான நிலைமைகள் சரியில்லாததனை அடுத்து இன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கோல்ட்ஸ் கழகம் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு, துடுப்பாட்டத்தினை ஆரம்பித்து 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 238 ஓட்டங்கள் எடுத்தது.

தமிழ் யூனியன் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதீர சமரவிக்ரம அரைச்சதம் விளாசி 74 ஓட்டங்கள் எடுக்க, ரொன் சந்திரகுப்தா 48 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுமுனையில் கொழும்பு கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் தேசிய அணி வீரரான வனிந்து ஹஸரங்க 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அஷான் பிரியஞ்சன் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 239 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி லக்ஷான் சந்தகனின் போராட்ட துடுப்பாட்டத்தோடு வெற்றி இலக்கிற்காக போராடிய போதும் 50 ஓவர்களில் அவர்களால் 9 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்கள் பெற்று போட்டியில் தோல்வியினையே தழுவ முடிந்தது.

கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை போராட்டம் காட்டிய லக்ஷான் சந்தகன் List A போட்டிகளில் தன்னுடைய கன்னி அரைச்சதத்தினை பதிவு செய்ததோடு, இறுதி வரை

ஆட்டமிழக்காமல் இருந்து ஒரு சிக்ஸர் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் பெற்றார். அதோடு மினோத் பானுக்க 43 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேஜர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இராணுவப்படை தெரிவு

மறுமுனையில் தமிழ் யூனியன் அணியின் பந்துவீச்சில் அபாரம் காட்டிய ப்ரமோத் மதுசான் 4 விக்கெட்டுக்களையும், திலும் சுதீர மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் – 238 (48.4) சதீர சமரவிக்ரம 74, ரொன் சந்திரகுப்தா 48, வனிந்து ஹஸரங்க 4/37

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 222/9 (50) லக்ஷான் சந்தகன் 62*, மினோத் பானுக்க 43, ப்ரமோத் மதுசன் 4/51, திலும் சுதீர 2/40, இசுரு உதான 2/51

முடிவு – தமிழ் யூனியன் அணி 16 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<