இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் இன்று (05) 12 போட்டிகளில் நடைபெற்றன.
இதில் தமிழ் யூனியன் கழகம், BRC, சரசென்ஸ் விளையாட்டுக் கழகம், ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம், NCC கழகம், சஹஷ்ர கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம், SSC கழகம், முவர்ஸ் விளையாட்டுக் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், ராகம கிரிக்கெட் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகம் என்பன வெற்றிகளைப் பதிவுசெய்தன.
இந்த நிலையில், லங்கன் கழகத்துக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் கழகத்துக்காக டில்ருவன் பெரேரா, களுத்துறை நகர கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகத்தின் ஷம்மு அஷான் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் BRC கழகத்தின் திலகரட்ன சம்பத் ஆகிய வீரர்கள் சதம் அடித்து அசத்தியிருந்தனர்.
இதில் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான 39 வயது நிரம்பிய டில்ருவன் பெரேரா List A போட்டிளில் தனது கன்னி சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதனிடையே, , இன்று நடைபெற்ற போட்டிகளில் 18 வீரர்கள் அரைச் சதங்களைக் குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
பந்துவீச்சை பொறுத்தமட்டில் களுத்துறை நகர கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகத்தின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய 17 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரள வைத்தார்.
List A போட்டிகளில் அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்த 5ஆவது இலங்கை வீரராக பிரபாத் ஜயசூரிய இடம்பிடித்தார்.
- இலங்கை டெஸ்ட் அணியில் திடீரென பல மாற்றங்கள்
- LPL 2022; தக்கவைக்கப்பட்ட மற்றும் நேரடி ஒப்பந்த வீரர்கள்
- ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடவுள்ள மஹீஷ் தீக்ஷன
அதேபோன்று, நீர்கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தின் டெலோன் பீரிஸ் 20 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், இன்று நடைபெற்ற போட்டிகளில் இரண்டு வீரர்கள் 5 விக்கெட் குவியலைப் பெற்றுக்கொண்டனர். கொழும்பு கிரிக்கெட் கழக வீரர் அஷான் பிரியன்ஜன் மற்றும் நீர்கொழும்பு கழகத்தின் தனுஷக் சந்தருவன் ஆகியோர் 5 விக்கெட் பிரதிரயைப் பதிவு செய்தனர்.
அத்துடன் இன்று நடைபெற்ற போட்டிகளில் இரண்டு அணிகள் 100 இற்கு குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தன.
இதில் நுகேகொட விளையாட்டுக் கழகம் நிர்ணயித்த 89 ஓட்டங்கள் வெற்றியிலக்கை விமானப்படை கழகம் இலகுவாக கடந்து வெற்றியைப் பதிவு செய்ய, பிரபல ராகம கிரிக்கெட் கழகம் நிர்ணயித்த 79 ஓட்டங்கள் வெற்றியிலக்கை அடைய முடியாமல் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
தமிழ் யூனியன் கழகம் – 312/4 (50) – டில்ருவன் பெரேரா 114, நவோத் பரணவிதான 57, கமேஷ் நிர்மால் 52*, யசித் ரூபசிங்க 2/16
லங்கன் கிரிக்கெட் கழகம் – 188/9 (50) – தேஷான் டயஸ் 60, டேவின்ட் பத்மநாதன் 36, ரவிந்து பெர்னாண்டோ 3/41, ஷிரான் பெர்னாண்டோ 2/25, திலும் சுதீர 2/42
முடிவு – தமிழ் யூனியன் கழகம் 124 ஓட்டங்களால் வெற்றி
Ace கெபிடல் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்
Ace கெபிடல் கழகம் – 270/9 (50) – ஷெஹான் பெர்னாண்டோ 94, துலீக திஸ்ஸகுட்டிகே 72, டி பாஸ்கரன் 38, தவீஷ கஹதுவாரச்சி 2/32, ஆகாஷ் சேனாரட்ன 2/45
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 208 (46) – தவீஷ கஹதுவாரச்சி 43, இஷித விஜேசுந்தர 43, தனுக தாபரே 3/44, அமித தாபரே 3/46
முடிவு – சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 62 ஓட்டங்களால் வெற்றி
பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 184/9 (50) – அனுக் பெர்னாண்டோ 51, சாஹித் மன்சூர் 44, சானக கோமசாரு 3/24, மாலிந்த பெரேரா 3/29
ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 188/5 (45.3) – மாதவ வர்ணபுர 68*, அஷான் பெர்னாண்டோ 59, மோஷத பெர்னாண்டோ 49*, சாஹித் மன்சூர் 2/29
முடிவு – ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி
சிலாபம் மேரியன்ஸ் கழகம் எதிர் BRC கழகம்
சிலாபம் மேரியன்ஸ் கழகம் – 235 (47.1) – அனுஜ் ஜோதின் 50, கவிந்து இரோஷ் 38, அவிந்து தீக்ஷன 30, மல்க மதுஷங்க 2/28, துஷான் ஹேமன்த 2/29, கெவின் கொத்திகொட 2/30
BRC கழகம் – 226/4 (39.1) – திலகரட்ன சம்பத் 120, டிலான் ஜயலத் 54, சஷேன் சில்வா 4/36
முடிவு – BRC கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி
NCC கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்
NCC கழகம் – 256/8 (50) – உபுல் தரங்க 58, சந்துன் வீரக்கொடி 57, லஹிரு உதார 44, நதீர பாலசூரிய 3/41
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 213 (41.5) – அஷேன் பண்டார 70, சதுரங்க ஜயதிலக 41, அசேல சிகெரா 3/34, அஷைன் டேனியல் 2/31
முடிவு – NCC கழகம் 43 ஓட்டங்களால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சஹஷ்ர கிரிக்கெட் கழகம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 201 (43.1) – மொஹமட் இன்சமாம் 37, சஹஸ் ஹன்ஸல 36, அவிஷ்க டில்ஷான் 2/30, பிரவீன் நிர்மால் 2/34
சஹஷ்ர கிரிக்கெட் கழகம் – 202/8 (41.2) – பிரவீன் நிர்மால் 49, துலன்ஜல பஹசர 25, சனிரு திஸாநாயக்க 3/34, ஜனித சதுரங்க 2/42
முடிவு – சஹஷ்ர கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 285/7 (48.5) – பவன் ரத்நாயக 51, நிமேஷ குணசிங்க 48, மாலிங்க அமரசிங்க 42, அசங்க மனோஜ் 3/60, சுமிந்த லக்ஷான் 2/58
இராணுவ கிரிக்கெட் கழகம் – 109 (29.1) – அசேல குணரட்ன 22, திசர பெரேரா 21, அஷான் பிரியன்ஜன் 5/27, மாலிந்த புஷ்பகுமார 3/17
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 192 ஓட்டங்களால் வெற்றி
SSC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்
SSC கழகம் – 331/4 (50) – சம்மு அஷான் 112*, சமிந்து விக்ரமசிங்க 83*, க்ரிஷான் சன்ஜுல 64, இஷங்க சிறிவர்தன 2/35, தினேஷ் இந்திக 2/42
களுத்துறை நகர கழகம் – 102 (24.2) – தினெத் ஜயகொடி 30, பிரபாத் ஜயசூரிய 7/17, தசுன் ஷானக 3/15
முடிவு – SSC கழகம் 229 ஓட்டங்களால் வெற்றி
செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்
செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 131 (29.2) – சச்சா டி அல்விஸ் 24, மானல்கர் டி சில்வா 24, இம்தியாஸ் ஸ்லசா 3/33, சானுக டில்ஷான் 2/21, மிலான் ரத்நாயக 2/33
முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 132/4 (26.2) – தினுக டில்ஷான் 50*, மொஹமட் சமாஸ் 35, அக்தாப் காதர் 2/19
முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி
காலி கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்
காலி கிரிக்கெட் கழகம் -127 (34.2) – விநுர துல்சர 28, ரவிந்து செம்புகுட்டிகே 24, தெவின் அமரசிங்க 22, கோஷான் தனுஷ்க 3/15, நிமேஷ் விமுக்தி 3/24, சன்ஜய சதுரங்க 2/17
பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 131/6 (36) – பார்த் பல்வாத் 71, அலி மெஹார் 24, சதுர லக்ஷான் 2/18, ரவிஷ்க விஜேசிறி 2/27
முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்
ராகம கிரிக்கெட் கழகம் – 78 (24.1) – சமிந்த பெர்னாண்டோ 23, தனுஷ்க சந்தருவன் 5/19, டில்ஷான் முனவீர 3/30
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 76 (21.2) – டெலோன் பீரிஸ் 6/20, சஷிக துல்ஷான் 3/28
முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 2 ஓட்டங்களால் வெற்றி
நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
நுகேகொட விளையாட்டுக் கழகம் – 89 (27.5) – துலான்ஜல மெண்டிஸ் 4/15, கயான் சிறிசோம 2/29
விமானப்படை விளையாட்டுக் கழகம் – 92/5 (22.2) – சிதிஜ சமோத் 27*, ஹன்ச டி சில்வா 2/42
முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<