பொலிஸ், குருநாகல் இளையோர் அணிகள் வெற்றி

Major Club Limited Over Tournament

250

பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் புளூம்பீல்ட் அணிக்கு எதிரான போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகமும் களுத்துறை நகர கழகத்திற்கு எதிராக குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகமும் வெற்றியீட்டின.

இலங்கையில் நிலவும் சிரற்ற காலநிலைக்கு மத்தியில் பிரதான கழகமட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு தொடர்ந்து இடையூறு இருந்து வருகிறது. இதனால் கடந்த வார இறுதி குழுநிலைப் போட்டிகளும் தடைப்பட்டன.

>>T10 லீக் ஆடும் இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்நிலையில் புதன்கிழமை (10) 12 போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் மழை காரணமாக 10 ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

எனினும், பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற புளூம்பீல்ட் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு இடையிலான ஆட்டம் 32 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட புளூம்பீல்ட் அணி 136 ஓட்டங்களுக்கே சுருண்டது.  யொஹான் டி சில்வா 30 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சுபுன் மதுசங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

>>பாகிஸ்தான் சென்று ஏழு T20i போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து

இந்நிலையில் பதிலெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 28.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இதேவேளை 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மக்கொன, சர்ரே வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட களுத்துறை நகர கழகம் 97 ஓட்டங்களுக்கே சுருண்டது. தினுஷ்க மாலன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பாடிய குருநாகல் இளையோர் வீரர்கள் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 136 (31.5) – யொஹான் டி சில்வா 30, சரித் குமாரசிங்க 25, சுபுன் மதுசங்க 3/25

பொலிஸ் விளையாட்டு கழகம் – 137/6 (28.5) – தெனுவ ராஜகருனா 29, திலகரத்ன சம்பத் 26, மதுக்க லியனபத்திரனகே 3/35

பொலிஸ் விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

களுத்துறை நகர கழகம் – 97 (36.1) – செனல் டி சில்வா 26, தினுஷ்க மாலன் 4/16

குருநாகல் யூத் விளையாட்டுக் கழகம் – 94/4 (23) – சமீர சதமால் 36, தனுஷ்க தர்மசிறி 30

குருநாகல் யூத் 6 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<