SSC அணியை வீழ்த்தியது புளும்பீல்ட்

Major Club Limited Over Tournament

190

இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் குழு நிலை போட்டிகள் புதன்கிழமை (03) நடைபெற்றன. இதில் பலம்மிக்க SSC அணியை புளும்பீல்ட் ஒரு ஓட்டத்தால் வீழ்த்தியதோடு கோல்ட்ஸ் கழகத்தை தமிழ் யூனியன் 32 ஓட்டங்களால் வென்றது.

கொரோனா தொற்று இடையூறுகளுக்கு பின் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலேயே இந்தத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற பல போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் புதன்கிழமை நடைபெறவிருந்த காலி கிரிக்கெட் கழகம் மற்றும் ஏசி கெப்பிட்டல் அணிகளுக்கு இடையிலான போட்டி நாணய சுழற்சி கூட இடம்பெறாமல் கைவிடப்பட்டது.

நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளும் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டே இடம்பெற்றன.

போட்டிகளின் சுருக்கம்

புளும்பீல்ட் கழகம் 200/8 (36) –  சரித்த குமாரசிங்க 62, நிமந்த மதுசங்க 40, கவிந்து நதீஷ 3/38

SSC 138/3 (28) – கிரிஷான் சஞ்சுல 56*, ரொசேன் சில்வா 27*

போட்டி முடிவு – புளும்பீல்ட் ஒரு ஓட்டத்தால் வெற்றி


தமிழ் யூனியன் 200 (44.3) – கமேஸ் நிர்மால் 43, சந்தூஷ் குணத்திலக்க 42, முதித் லக்ஷான் 4/37

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 160/9 (41) – பிரியமால் பெரேரா 38, பிமோத் மதுசான் 5/48

போட்டி முடிவு – தமிழ் யூனியன் 32 ஓட்டங்களால்வெற்றி


கண்டி சுங்க விளையாட்டு கழகம் 113 (25.5) – மின்ஹாஜ் ஜலீல் 28, கஹன் மதுசங்க 2/13

லங்கா கிரிக்கெட் கழகம் 116/3 (19.4) – லஹிரு தில்சான் 61*

போட்டி முடிவு – லங்கா கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 161/9 (35) – துலாஜ் ரங்க 39, அக்கிரகொட 4/33, டிலங்க அவார்த் 3/22

கடற்படை விளையாட்டு கழகம் 97 (27.5) – மதுர மதுசங்க 41, தினுஸ்க மாலன் 2/05

போட்டி முடிவு – குருநாகல் இளையோர் 74 ஓட்டங்களால் வெற்றி 


சரசன் விளையாட்டுக் கழகம் 145 (49.1) – பிமோத் மதுவன்த 43, அலங்கார அசலங்க சில்வா 3/23

பதுரலிய கோல்ட் கிரிக்கெட் கழகம் 148/7 (37.4) – சந்தும் வீரக்கொடி 51, பிமோத் மதுவந்த 3/25

போட்டி முடிவு – பதுரலிய 3 விக்கெட்டுகளால் வெற்றி


பொலிஸ் விளையாட்டு கழகம் 193 (49.5) – அசேல சகேரா 42, கல்ஹார செனரத்ன 3/41

ராகம கிரிக்கெட் கழகம் 194/5 (44.5) – இசான் ஜயரத்ன 49*, பிரியதர்சன 2/44

போட்டி முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி


BCR 186/9 (48) யுரான் நிமாச 35*, முவின் சுபசிங்க 3/32

விமானப்படை விளையாட்டுக் கழகம் 140 (38.3) – உதயவன்ச பராக்கிரம 30, சமீர திசாநாயக்க 4/18

போட்டி முடிவு – BCR 47 ஓட்டங்களால் வெற்றி


இராணுவ கிரிக்கெட் கழகம் 158/9 (39) – அசேல குணரத்ன 44, நிசான் பீரிஸ் 3/17

நீர்கொம்பு கிரிக்கெட் கழகம் 167/3 (35.3) – அஞ்​சலோ ஜயசிங்க 43*, துலின டில்சான் 2/39

போட்டி முடிவு – நீர்கொழும்பு 7 விக்கெட்டுகளால் வெற்றி


களுத்தறை நகர கழகம் 79 (28) – அசந்த பஸ்நாயக்க 24, சதுரங்க டி சில்வா 5/15

NCC 83/4 (14) –  சதுரங்க டி சில்வா 28*

போட்டி முடிவு – NCC 6 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<