SSC முதல் வெற்றி; தமிழ் யூனியனுக்கு மற்றொரு வெற்றி

Major Club Limited Over Tournament

302

இலங்கையின் பிரதான கழக அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டித் தொடரில் பலம்மிக்க SSC அணி முதல் வெற்றியை பதிவு செய்ததோடு தமிழ் யூனியன் அணி மற்றொரு வெற்றியை பெற்று B குழுவில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மக்கொன, சர்ரே விலேஜ் அரங்கில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் SSC அணி B குழுவுக்காக பதுரெலிய விளையாட்டு கழகத்தை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட SSC அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.

ஜப்னா கிங்ஸ் அணியின் ஆலோசகராக ஹேமங் பதானி

அணித்தலைவர் சம்மு அஷான் ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களை பெற்றதோடு தேசிய அணி வீரர் அவிஷ்க பெர்னாண்டோ ஆரம்ப வீரராக வந்து 58 ஓட்டங்களை பெற்றார். அவர் ஆரம்ப விக்கெட்டுக்காக கிறிஷான் சன்ஜுலவுடன் சேர்ந்த 100 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். சன்ஜுல 53 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய பதுரெலிய விளையாட்டுக் கழகம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 105 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்மூலம் 147 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய SSC அணி 10 போட்டிகளின் பின் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

முன்னர் அந்த அணி இரண்டு தோல்விகளை பெற்ற நிலையில் புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் ஆதிக போட்டிகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ICC இன் தலைமை நிர்வாக அதிகாரியானார் ஜெப் அலார்டிஸ்

எனினும் B குழுவில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுநகர் கழகம் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்திற்க எதிரான போட்டியை 2 விக்கெட்டுகளால் வென்றது.

கொழும்பு, பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சரசென்ஸ் 123 ஓட்டங்களுக்கே சுருண்டது. அபாரமாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டெர்சே 6 ஓவர்களில் 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தர்.

T10 லீக்கில் விளையாடவுள்ள மேலும் இரு இலங்கை வீரர்கள்!

பதிலெடுத்தாடிய தமிழ் யூனியன் அணிக்காக அரம்ப வீரர் நவோத் பரணவிதான அரைச்சதம் பெற்றபோதும் மறுமுனை விக்கெட்டுகள் குறுகிய இடைவேளையில் பறிபோனதால் வெற்றி இலக்கை எட்டு போராட வேண்டி இருந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்தே இலக்க எட்ட முடிந்தது.

தமிழ் யூனியன் அணி இந்தத் தொடரில் 11 போட்டிகளில் ஆடி ஒரு தோல்விகூட இன்றி 5 ஆட்டங்களில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திங்கட்கிழமை நடைபெற்ற மேலும் இரண்டு போட்டிகளில் கண்டி சுங்க கிரிக்கெட் கழகம், லங்கா கிரிக்கெட் கழகம் என்பன வெற்றி பெற்றன.

போட்டியின் சுருக்கம்

SSC 252/8 (50) – சம்மு அஷான் 84*, அவிஷ்க பெர்னாண்டோ 58, கிறிஷான் சன்ஜுல 53, ருச்சிர கோசித்த 2/46

பதுரலிய கிரிக்கெட் கழகம் 105 (33.5) – அலங்கார அசங்க சில்வா 33, பிரபாத் ஜயசூரிய 3/23, லக்சித்த மானசிங்க 2/21

SSC 147 ஓட்டங்களால் வெற்றி


சரசென்ஸ் விளையாட்டு கழகம் 123 (32.5) – சிதார கிம்ஹான 56, ஜெப்ரி வன்டெர்சே 5/13, ரவிந்து பெர்னாண்டோ​ 2/22

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுநகர் கழகம் 124/8 (33.5) – நவோத் பரணவிதான 60, கவிக்க டில்சான் 4/21

தமிழ் யூனியன் 2 விக்கெட்டுகளால் வெற்றி


கண்டி சுங்க விளையாட்டு கழகம் 175 (48.2) – ரஷ்மிக்க மதுசங்க 28, உமேக சதுரங்க 26*, சஹான் நாணயக்கர 2/19, கவிந்து பெரேரா 2/40

நுகேகொட விளையாட்டு மற்றும் நலன்புரி கழகம் – 74 (30.2) – பத்தும் மதுசங்க 20*, உமேக சதுரங்க 4/12, மதுசான் திலின 3/08, சச்சித்ர பெரேரா 2/17

கண்டி சுங்க விளையாட்டு கழகம் 101 ஓட்டங்களால் வெற்றி


லங்கா கிரிக்கெட் கழகம் 216 (44.5) – லஹிரு டில்ஷான் 73, ரிசித் உபமால் 32, மஹேஷ் பிரியதர்ஷன 5/42, அசந்த பஸ்னாயக்க 3/39

களுத்துறை நகர கழகம் 122 (35.2) – ருமேஷ் நல்லபெரும 32*, ரஜீவ வீரசிங்க 3/15, தமித் சில்வா 3/15

லங்கா கிரிக்கெட் கழகம் 94 ஓட்டங்களால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<