இலங்கை பிரதான கழகமட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் சகலதுறை வீரர் திக்சில டி சில்வாவின் அதிரடி சதத்தின் மூலம் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
‘பி’ குழுவுக்காக கொழும்பு, பொலிஸ் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிலாபம் மேரியன்ஸ் அணி ஆரம்ப விக்கெட்டுகளை மளமளவென்று இழந்தபோதும் மத்திய வரிசையில் வந்த டி சில்வா 65 பந்துகளில் 6 பௌண்டரிகள் 8 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை பெற்றார்.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் வெற்றியை நோக்கி களமிறங்கும் இலங்கை
இதன்மூலம் அந்த அணி 49 ஓவர்களில் 275 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடர்ந்து பதிலெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து.
இதேவேளை BRC மைதானத்தில் நடைபெற்ற BRC அணிக்கு எதிரான போட்டியில் கண்டி கஸ்டம்ஸ் கிரிக்கெட் கழகம் ஒரு ஓட்டத்தால் போராடி வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணி 101 ஓட்டங்களுக்கே சுருண்டபோதும் அந்த இலக்கை எட்ட கண்டி அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்த 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கோல்ட்ஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய அகில, சிராஸ்
இதுபோன்று களுத்துறை இளையோர் கழகம் மற்றும் நீர்கொழும்பு விளையாட்டு மற்றும் நலன்புரி கழகங்களுக்கு இடையினால ஆட்டமும் குறுகி ஓட்டங்களைக் கொண்டதாக அமைந்து. களுத்துறை இளையோர் கழகம் 88 ஓட்டங்களுக்கே சுருண்ட நிலையில் நீர்கொழும்பு கழகம் 5 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கை எட்டியது.
தவிர, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏனைய போட்டிகளில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம், இராணுவ விளையாட்டு கழகம் மற்றும் கடுவெள சிசி லயன்ஸ் அணிகள் வெற்றியீட்டியன.
போட்டியின் சுருக்கம்
BRC 101 (30.4) – டான் மவுஸ்லி 21, ரவிந்திர கருணாரத்ன 3/19, சச்சித்ர பெரேரா 2/18, உமேக சத்துரங்க 2/20
கண்டு கஸ்டம்ஸ் விளையாட்டு கழகம் 103/9 – மின்ஹாஜ் ஜலீல் 21, துஷான் ஹேமன்த 6/28
கண்டு கஸ்டம்ஸ் விளையாட்டு கழகம் 1 விக்கெட்டால் வெற்றி
களுத்துறை இளையோர் கழகம் 88 (26.4) – அசந்த பஸ்னாயக்க 18, ரவீன் சாயர் 2/11, ரனித்த லியனாரச்சி 2/16
நீர்கொழும்பு விளையாட்டு மற்றும் நலன்புரி கழகம் 89/5 (18.5) – நிமேச குணசிங்க 28, டிலான் ஜயலத் 21, இசாக்க சிறிவர்தன 2/34
நீர்கொழும்பு கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி
CS கிரிக்கெட் அகடமி 128 (36) – பத்தும் தனஞ்சய 34, ஓசத சங்கஜ 35, திவங்க விராஜ் 2/12, சாகர தரங்க 2/18
கடுவௌ சி.சி. லயன்ஸ் 132/5 (12.2) – அருண வீரசிங்க 69*, செனுல சமரசிங்க 3/19
கடுவௌ சி.சி. லயன்ஸ் 5 விக்கெட்டுகளால் வெற்றி
கொழும்பு கிரிக்கெட் கழகம் 187 (50) – லசித் அபேரத்ன 47, அஷான் பிரியஞ்சன் 38, அரவிந்த பிரேமரத்ன 5/38, மதுசங்க பிரெமரத்ன 2/44
விமானப் படை விளையாட்டு கழகம் 146 (46.1) – கமிர விஜேனாயக்க 50, முவின் சுபசிங்க 26, சொனால் தினூச 3/17, மலிந்த புஷ்பகுமார 3/25
கொழும்பு கிரிக்கெட் கழகம் 41 ஓட்டங்களால் வெற்றி
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 275 (49) – திக்சில டி சில்வா 106*, கசுன் விதுர 60, சத்துரங்க குமார 2/05, நிசல தாரக்க 2/58
பொலிஸ் விளையாட்டு கழகம் 221 (45) – சத்துரங்க குமார 52, அசேன் பண்டார 46, தெனுவன் ராஜபக்ஷ 41, அவிந்து தீக்சன 3/38, கசுன் விதுர 2/19,
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 54 ஓட்டங்களால் வெற்றி
செபஸ்டியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் 170 (31.5) – சசித்த ஜயதிலக்க 61*, அதீச நாணயக்கார 38, உதித் மதுசான் 4/56, ஆகாஷ் செனரத்ன 2/25
சரசென்ஸ் விளையாட்டு கழகம் 171/3 (31) – சிதார கிம்ஹான 51, நவிந்து விதானகே 41
சரசென்ஸ் விளையாட்டு கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி
கடற்படை விளையாட்டு கழகம் 139 (39.5) – மதுர மதுசங்க 23, சுவங்க விஜேவர்தன 23, செஹந்த சொய்சா 5/37, அசேல குணரத்ன 2/13
இராணுவ விளையாட்டு கழகம் 140/3 (31) – அசேல குணரத்ன 59*, லக்சான் எதிரிசிங்க 59*, பசிந்து மதுசான் 2/28
இராணுவ விளையாட்டு கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி