NCC எதிர் நீர்கொழும்பு இடையிலான போட்டி ‘டை’யில் முடிவு

Major Club Limited Over Tournament

202

இலங்கை பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் NCC மற்றும் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் இரு அணிகளும் சமமான ஓட்டங்களை பெற்று ‘டை’யில் முடிந்தது.  

கட்டுநாயக்க, மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஏ குழுவுக்காக சனிக்கிழமை (13) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட NCC அணி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் பசிந்து உசட்டிகே நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

>>WATCH – மிக்கி ஆர்தரின் பயிற்றுவிப்பின் கீழ் முன்னேறியதா இலங்கை?

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகமும் சரியாக 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதேபோன்று சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு போட்டியில் கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்தை கடற்படை விளையாட்டுக் கழகம் 24 ஓட்டங்களால் வென்றது.  ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற நிலையில் ஏ குழுவில் கடற்படை அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

>>SLC தலைவர் பதினொருவர் அணியின் தலைவராகும் சரித் அசலங்க

இதில் லங்கா கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் இராணுவ கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.  ஏ குழுவில் இராணுவக் கிரிக்கெட் கழகம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மக்கொன சர்ரே விலேஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தை ராகம கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எவ்வாறாயினும் சனிக்கிழமை நடைபெறவிருந்த மேலும் நான்கு போட்டிகள் ஒரு பந்து கூட விசப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

NCC 195 (43.1) – ஹசித போயகொட 43, கவீன் பண்டார 37, பசிந்து உசெட்டிகே 5/39, டில்ஷான் முனவீர 3/37

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 195 (35.3) – மொஹமட் மொஹ்சின் 33, அஞ்செலோ ஜயசிங்க 28, யுகீஷ டிஷான் 3/32, சதுரங்க டி சில்வா 3/41

போட்டி டையில் முடிவு

லங்கா கிரிக்கெட் கழகம் 128 (44.5) – லஹிரு டில்ஷான் 32, கீத் குமார 29, சீக்குகே பிரசன்ன 3/22, அசேல குணரத்ன 2/24

இராணுவ கிரிக்கெட் கழகம் 130/3 (24.4) – ஹிமாச லியனகே 55*, அசேன் ரன்திக்க 34, கசுன் மதுசங்க 2/30

இராணுவ கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி

சரசென் விளையாட்டுக் கழகம் 162 (42) – பிரமோத் மதுவந்த 46, நவிந்து விதானகே 32, ஜனித் லியனகே 3/27, இஷான் ஜயரத்ன 2/27

ராகம கிரிக்கெட் கழகம் 163/9 (42) – ஜனித் லியனகே 27, சமிந்த பெர்னாண்டோ 27, பிரமோத் மதுவன்த 2/18, ஆகாஷ் செனரத்ன 2/26

ராகம கிரிக்கெட் கழகம் 1 விக்கெட்டால் வெற்றி

கடற்படை விளையாட்டுக் கழகம் 197 (50) – துஷார சமரகோன் 50, சஹன் கோசல 37, ரவிந்திர கருணாரத்ன 4/30, சம்பத் பெரேரா 2/36

கண்டி கஸ்டம்ஸ் விளையாட்டு கழகம் 173 (48.3) – சானக்க விஜேசிங்க 58, ஹசித்த நிர்மால் 26, பசிந்து மதுசான் 4/28

கடற்படை விளையாட்டுக் கழகம் 24 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<