இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (24) நடைபெற்ற போட்டிகளில் BRC, பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகம் என்பன வெற்றிகளைப் பதிவுசெய்தன.
இதில் நுகேகொடை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் BRC கழகம் 134 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் முதலில் துப்பெடுத்தாடிய BRC கழகம், இங்கிலாந்து வீரர் டேனியல் மௌஸ்லியின் சதத்தின் உதவியால் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
BRC கழகத்துக்காக விளையாடிவரும் 20 வயதுடைய இங்கிலாந்து வீரரான டேனியல் மௌஸ்லி, முதல்தரப் போட்டிகளில் லிஸ்ட் A போட்டிகளில் தனது முதலாவது சதத்தைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், இலங்கையின் பிரதான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரில் பதிவாகிய இரண்டாவது சதம் இதுவாகும்.
இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ள இவர், இங்கிலாந்தின் வார்விக்ஷெயார் கழகத்துக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- திக்சில டி சில்வாவின் அதிரடி சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் வெற்றி
- கோல்ட்ஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய அகில, சிராஸ்
- பொலிஸ், குருநாகல் இளையோர் அணிகள் வெற்றி
இதனிடையே, 233 என்ற சவாலான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நுகோகொடை விளையாட்டுக் கழகம் 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதுஇவ்வாறிருக்க, கடற்படை விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் கடற்படை கழகம் அணி 111 ஓட்டங்களை பெற்ற நிலையில், பதிலெடுத்தாடிய விமானப்படை கழகம் 112 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.
இதேநேரம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை அதன் சொந்த மைதானத்தில் வைத்து பொலிஸ் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொலிஸ் கழகம் திலகரட்ன சம்பத்தின் அரைச்சதத்தின் உதவியால் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கழகத்தால் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதில் பொலிஸ் கழக வீரர் நளின் பிரியதர்ஷன 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று 11 போட்டிகள் நடைபெறவிருந்தபோதும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து போட்டிகள் கைவிடப்பட்டதோடு, மூன்று போட்டிள் பாதியிலேயே கைவிடப்பட்டன.
போட்டிகளின் சுருக்கம்
BRC கழகம் எதிர் நுகேகொடை விளையாட்டுக் கழகம்
BRC கழகம் – 232/10 (33.5) – டேனியல் 105, துஷான் ஹேமன்த 46, லஹிரு சமரகோன் 25, ராகுல் குணசேகர 3/35, நிலன்த பிரேமரத்ன 3/50, சஹன் நாணயக்கார 2/30
நுகேகொடை விளையாட்டுக் கழகம் – 98/10 (23.3) – ரவீன் சயேர் 23, துஷான் ஹேமன்த 4/34, லஹிரு சமரகோன் 2/13
முடிவு – BRC கழகம் 134 ஓட்டங்களால் வெற்றி
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
கடற்படை விளையாட்டுக் கழகம் – 111/10 (38.1) – மதுர மதுஷங்க 35, கயான் சிறிசோம 4/15, மதுஷங்க பிரேமரத்ன 3/25, துலன்ஜன மெண்டிஸ் 2/22
விமானப்படை விளையாட்டுக் கழகம் – 112/8 (29.1) உதயவன்ச பராக்ரம 21, மொவின் சுபசிங்க 21, பசிந்து மதுஷான் 3/29, அரவிந்த அகுருகொட 3/28, சுதார டக்ஷின 2/30
முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 171/10 (33) – திலகரட்ன சம்பத் 51, நதீர பாலசூரிய 32*, சுஜான் மயுர 23, அகில தனன்ஜய 3/31, ரொஹான் சன்ஜய 2/32
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 109/10 (21.1) – சங்கீத் குரே 33, நளின் பிரயதர்ஷன 5/39, லஹிரு தியன்த 3/20
முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 62 ஓட்டங்களால் வெற்றி
சிலபாம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
சிலபாம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 192/10 (32.5) – ருமேஷ் புத்திக 50, தில்ஷில டி சில்வா 33, புலின தரங்க 31, சுபானு ராஜபக்ஷ 3/32, ரஜித் பிரியன் 2/23
காலி கிரிக்கெட் கழகம் – 96/1 (15.1) – யசோதா லங்கா 46, லிசுல லக்ஷான் 31*
பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்
பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 144/10 (20) – சனுக துலாஜ் 45, மாலிங்க அமரசிங்க 20, உதித் மதுஷான் 3/34, மொஹமட் டில்ஷாத் 2/23
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 30/1 (7)
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம் (28)
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 100/8 (28) – அஞ்சலோ ஜயசிங்க 47, சானுக டில்ஷான் 2/16, அதீச திலன்சன 2/20
முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 67/4 (15.4) – சாலிந்த உஷான் 20, உபுல் இந்திரசிறி 2/16
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<