BRC அணிக்கு எதிரான மேஜர் எமர்ஜிங் லீக் குழு நிலை கிரிக்கெட் போட்டியில் காலி கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்து போட்டியை சமநிலை செய்தது.
இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தத் தொடரின் A குழுவுக்காகவே BRC – காலி கிரிக்கெட் கழகங்கள் இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் ஆடின.
டி-20 உலகக் கிண்ண ஆரம்ப கட்டம் இலங்கைக்கு எவ்வாறு இருக்கும்?
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 16 நாட்கள், 51 போட்டிகளுக்கு பின் 2020 ஐ.சி.சி. டி-20 உலகக்…
BRC மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்து 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் துவிந்து திலகரத்ன 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். துவிந்து திலகரத்ன இலங்கை முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் ஹஷான் திலகரத்னவின் மகனாவார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த BRC அணி சார்பில் கவின் கொத்திகொட 56 ஓட்டங்களை பெற்றார். மத்திய வரிசை வீரர்களும் சற்று வேகமாக கணிசமான ஓட்டங்களை பெற்றதால் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கு 123 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையிலேயே காலி கிரிக்கெட் கழகம் ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் துவிந்து திலகரத்ன காலி விக்கெட்டுகளை சாய்க்க அந்த அணி நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. எனினும் ஆட்ட நேரம் முடியும் வரை அந்த அணி தனது பின்வரிசை விக்கெட்டுகளை காத்துக் கொண்டு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.
இதன்படி ஆட்ட நேர முடிவின்போது காலி கிரிக்கெட் கழகம் 81 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
போட்டியின் சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 113 (39.4) – ரவிஷ்க விஜேசிறி 26, சானுபக்க சன்தூஷ் 22, வினுர துல்சர 23, துவிந்து திலகரத்ன 5/48, அஷேன் டானியல் 3/37
BRC (முதல் இன்னிங்ஸ்) – 286/8d (38) – கெவின் கோத்திகொட 56, இசிவர திசாநாயக்க 39, லேஷான் அமரசிங்க 33, கவிந்து எதிரிசிங்க 3/59, திசர டில்ஷான் 2/36
காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 81/6 (32) – வினுர துல்சர 23*, துவிந்து திலகரத்ன 3/23, ஆஷேன் டானியல் 2/16
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<