பங்களாதேஷ் அணியின் அனுபவ சகலதுறை வீரர் மஹ்மதுல்லாஹ் இந்திய அணிக்கு எதிரான T20I தொடரையடுத்து T20I போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச T20I கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலமாக விளையாடிய மூன்றாவது வீரராக மஹ்மதுல்லாஹ் உள்ளார். இவர் 2007ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி 17 வருடங்கள் T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரர்கள் பரிந்துரையில் கமிந்து, பிரபாத்
கடந்த 2021ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த மஹ்மதுல்லாஹ் சகீப் அல் ஹஸனின் அறிவிப்பை தொடர்ந்து தானும் T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். சகீப் அல் ஹஸன் இந்தியாவுக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை அடுத்து T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார்.
மஹ்மதுல்லாஹ் டெஸ்ட் மற்றும் T20I போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். எனவே அடுத்துவரும் மேற்கிந்திய தீவுகள் தொடர் மற்றும் ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணம் போன்ற தொடர்களுக்காக தயாராகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹ்மதுல்லாஹ்139 T20I போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதங்கள் அடங்கலாக 2034 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<