கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள மஹ்மதுல்லாஹ்!

202

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் மஹ்மதுல்லாஹ் ரியாத், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள காரணத்தால் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில்  (PSL) விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் ப்ளே-ஓஃப் சுற்றில் விளையாடுவதற்கு மஹ்மதுல்லாஹ் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், தொற்று உறுதிசெய்யப்பட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மீண்டும் மாற்றம்

இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையில், “மஹ்மதுல்லாஹ்வுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடமாட்டார்” என்றார். 

பங்களாதேஷ் அணியின் வீரர்களான மஹ்மதுல்லாஹ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ப்ளே-ஓஃப் சுற்றுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். லாஹூர் கெலண்டர்ஸ் அணி கிரிஸ் லின்னுக்கு பதிலாக தமிம் இக்பாலை அணிக்கு அழைத்திருந்ததுடன், முல்தான் சுல்தான்ஸ் அணி மொயீன் அலிக்கு பதிலாக மஹ்மதுல்லாஹ்வை இணைத்திருந்தது.

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து T20 தொடரின் காரணமாக பங்களாதேஷ் வீரர்களுக்கு, LPL தொடரில் விளையாடுவதற்கான அனுமதி மறுக்கப்படடிருந்தது. எனினும், பாகிஸ்தான் சுப்பர் லீக் குறித்த தொடருக்கு முன்னர் நடக்கவுள்ளதால், மேற்குறித்த இருவருக்கும் பயண அனுமதியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியிருந்தது. ஆனால், தற்போது துரதிஷ்டவசமாக மஹ்மதுல்லாஹ் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் சுப்பர் லீக் பெஷாவர் ஷல்மி அணியில் விளையாடிய லியம் லிவிங்ஸ்டன், அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் மற்றுமொரு வீரரான சாகீப் மொஹமட் அந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Video – பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தந்த Zimbabwe | Cricket Galatta Epi 44

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில், நவம்பர் 14ம் திகதி கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது குவாலிபையர் போட்டி நடைபெறவுள்ளதுடன், எலிமினேட்டர் போட்டி லாஹூர் கெலண்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஷல்மி அணிகளுக்கு இடையில் நவம்பர் 15ம் திகதி நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டி நவம்பர் 17ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<