ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இம்முறை நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் எதிரணிகளுக்கு சவால் கொடுக்கக் கூடிய அணிகளாக தங்களை உயர்த்திக்கொண்டுள்ளன.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள…
அசிய கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணி, தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியையும், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. முக்கியமாக குறித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றிருக்கும் இலங்கை அணிக்கு, குறித்த இரண்டு அணிகளும் கடுமையான போட்டியை கொடுக்க காத்திருக்கின்றன.
இதில், இலங்கையுடன் மோதவுள்ள பங்களாதேஷ் அணி, இலங்கைக்கு எதிராக கடந்த சில மாதங்களில் பெற்றிருந்த வெற்றிகளை கவனத்திற்கொண்டு, முதல் போட்டியில் விளையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முதல் போட்டி மற்றும் அணியின் ஆயத்தங்கள் தொடர்பில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மொஹமதுல்லாஹ் ரியாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியை முதல் போட்டியில் எதிர்கொள்வது தொடர்பில் மொஹமதுல்லா குறிப்பிடும்பொழுது,
“கடந்த சில மாதங்களாக இலங்கையுடன் நாம் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுள்ளோம். ஆனால், இலங்கை அணி மிகச்சிறந்த அணி. தற்போது அவர்கள் சிறந்த முறையில் விளையாடி வருகின்றனர். அதனால் நாம் எங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே அவர்களை வெற்றிக்கொள்ள முடியும். நாம் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருகைத்தந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எனவே, எங்களால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என நினைக்கிறேன் “ என்றார்.
ஆசிய கிண்ணப் போட்டிகளின் பிறகு ஓய்வு பெற மாட்டேன் என்கிறார் மாலிங்க
தனக்கு வயதானாலும் உடற்தகுதி குறித்து மிகுந்த…
ஆசிய கிண்ணத்துக்கான ஆயத்தம் குறித்து குறிப்பிடுகையில்,
“இம்முறை ஆசிய கிண்ணத்தில் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. புதிய சாதனைகள் படைக்கப்படும் போதுதான் வெற்றிகள் சுவாரஷ்யமாகும். அணிக்காக முடிந்தளவு பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளேன். அத்துடன் அனைத்து அணிகளும் இம்முறை பலமான அணிகளாக உள்ளன. அதனால் நாம் ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டு, ஓய்வில் இருக்க முடியாது. ஒவ்வொரு போட்டிக்காகவும் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இறுதியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 3 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது. எனினும் கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி விளையாடி வருவதால், ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.