ஹம்பாந்தோட்டை, சூரியவெவயில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், எதிர்வரும் ஜுலை மாதத்தில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் ஒன்றை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி
இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற போட்டியில்..
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், குறித்த மைதானத்தில் இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியுடனான ஒரேயொரு போட்டி மாத்திரமே நடைபெற்றிருந்தது.
2012ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணப் போட்டி மற்றும் ஐசிசி உலகக் கிண்ண போட்டிகளுக்காக ஓரிரண்டு போட்டிகளை நடத்துவத்துக்காக 2011ஆம் ஆண்டு இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்திருந்தன.
இங்கு மூன்று ஒருநாள் போட்டிகளை நடத்துவதால், இலங்கை கிரிக்கெட் சபைக்கு பகலிரவு போட்டிகளுக்காக மேலதிகமாக செலவாகும் 10 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சேமிக்கப்படும் குறித்த நிதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்பு பணிகளுக்கு செலவிடப்படவுள்ளது.
மேலும், மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்வதால், கிரிக்கெட் மற்றும் தென் மாகாண முதல் தர கிரிக்கெட் போட்டிகளுக்கு அது பயனளிக்கும் என இலங்கை கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
SLC ஏற்பாட்டில் உபாதைகளை நிவர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வூட்டும் பட்டறை
கிரிக்கெட் வீரர்களின் உபாதைகளை தடுத்தல் மற்றும் உபாதைகளை..
இலங்கையின் அதிமேதக ஜனாதிபதி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.டபிள்யு.ஜெ.சி.டி சில்வா, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு மேம்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளார்.
அந்த வகையில், ஜிம்பாப்வே அணியின் சுற்றுப்பயணத்தை எதிரவரும் ஜூன் 27ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இப்போட்டிகளை ஜூலை 6ஆம், 8ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.