உலக கிரிக்கெட் வரலாற்றில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதல் T-20 கிரிக்கெட் தொடர் வரும் பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க
மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான கிரிக்கெட்டை……..
உலகின் பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்தின் எல்ப் மலை அடிவாரத்தில் உள்ள சென். மொரிட்ஸ் ஏரிக்கு மேல் பனிப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள கிராமமொன்றில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. முன்னதாக சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக பிரித்தானிய நாட்டவர்களால் இவ்வாறு சென். மொரிட்ஸ் மலையில் கிரிக்கெட் விளையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென். மொரிட்ஸ் ஐஸ் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி பணியுடன் கூடிய செயற்கை ஆடுகளத்தைக் கொண்ட கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
அத்துடன், 20 பாகை செல்ஸியஸுக்கு குறைவான வெப்பநிலையுடன் நடைபெறவுள்ள இப்போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கமைவாக இடம்பெற்றாலும், போட்டிகளுக்காக சிவப்பு நிற பந்தும், வீரர்கள் ஸ்பைக்ஸுக்குப் பதிலாக சாதாரண சப்பாத்துக்களும், தொப்பி மற்றும் கையுறைகளும் பயன்படுத்த முடியும்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண அனுமதியுடன், தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடுகின்ற வீரர்களும், ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்களும் இத்தொடரில் முதற்தடவையாக பங்கேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதன்படி, பத்ராஸ் பெலஸ் டயமன்ட் அணியில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், ரோயல்ஸ் அணியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளனர்.
இதேநேரம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் சஹீட் அப்ரிடி, சொயிப் அக்தர், ஜெக் கலீஸ், கிரஹம் ஸ்மித், விரேந்திர சேவாக், டேனியல் விட்டோரி, மொஹமட் கைப், நெதன் மெக்கலம் உள்ளிட்ட பிரபல வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேலவினால் வெளியீடு
பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய மூன்றாண்டு ……..
இந்நிலையில், குறித்த T-20 தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி லசித் மாலிங்க மற்றும் மஹேல ஜயவர்தன ஆகிய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, போட்டியின் போது களியாட்ட நிகழ்வுகள், இசைக் கச்சேரி மற்றும் விசேட இரவு நேர விருந்துகளையும் ஏற்பாடு செய்வதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.