ஐசிசி இளையோர் உலகக்கிண்ணத்துக்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை இளையோர் அணியுடன் மஹேல ஜயவர்தன இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை இளையோர் அணியின் ஆலோசகராகவும் பதவியேற்றுள்ளார்.
>> U19 உலகக்கிண்ணத்துக்காக மே.தீவுகள் புறப்பட்ட இலங்கை அணி
அதன்படி, இந்த ஆண்டு நிறைவுவரை இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஆலோசகராக செயற்படவுள்ள இவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) இளையோர் அணியுடன் மேற்கிந்திய தீவுகளில் இணைந்துக்கொள்வார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை இளையோர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன செயற்பட்டுவரும் நிலையில், மஹேல ஜயவர்தன அணியின் ஆலோசகராக இந்த உலகக்கிண்ணத்தொடர் நிறைவுவரை பணியாற்றவுள்ளார்.
இளையோர் உலகக்கிண்ணத்துக்கான இலங்கை U19 அணி நேற்றைய தினம் (02) மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுள்ளதுடன், முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியையும் (17ம் திகதி), இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியையும் (21ம் திகதி) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<