இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை நிராகரித்த மஹேல

England Cricket

1377

இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கான பதவியினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிரகாரித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக நிலவும் தலைமை பயிற்றுவிப்பாளருக்கான இடத்தை மஹேல ஜயவர்தன நிரகாரித்துள்ளார் என இங்கிலாந்தின் முன்னணி ஊடகமான டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IPL வரலாற்றில் மும்பை படைத்த மோசான சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் புதிய முகாமைத்துவ பணிப்பாளரான ஜெப் கீயின், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கான பெயர் பட்டியலில் மஹேல ஜயவர்தனவின் பெயர் முன்னிலையில் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்கு முதல் தற்போது இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஸ் சில்வர்வூட், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

மஹேல ஜயவர்தன தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவருகின்றார். உலகின் சிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக பார்க்கப்படும் மஹேல ஜயவர்தனவின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி 2017, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் கிண்ணங்களை வென்றுள்ளது.

அதேவேளை, இங்கிலாந்தில் முதன்முறையாக நடைபெற்ற தி ஹண்ட்ரட் தொடரில் சௌதெரன் பிரேவ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன செயற்பட்டிருந்த நிலையில், அந்த அணி சம்பியனாக முடிசூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<