இலங்கை தேசிய அணியின் தலைமை மற்றும் முகாமைத்துவ நிலைகளை அவர்கள் சரிசெய்திருக்கும் நிலையில் ஆடுகளத்தில் இலங்கையின் மோசமான நாட்களை அவர்கள் கடந்து போயிருக்கக் கூடும் என்று மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
இங்கிலாந்து இளையோர் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் சவீன்
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதுடைய சவீன் பெரேரா..
சந்திக்க ஹத்துருசிங்கவை பயிற்சியாளராக நியமித்தது மற்றும் அஞ்செலோ மெதிவ்சுக்கு மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டித் தலைமை பதவியை வழங்கியமை என்பவற்றுக்கு மஹேல ஜயவர்தன மகிழ்ச்சியை வெளியிட்டார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வெளியாகும் ‘தி நேஷன்’ நாளிதழுக்கு கடந்த புதனன்று (17) பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்தபோதே இலங்கை அணியின் முன்னாள் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையில் 2017 ஆம் ஆண்டு ஆடுகளத்திலும் ஆடுகளத்திற்கு வெளியிலும் ஒரு பிரச்சினைக்கு பின்னர் மற்றொரு பிரச்சினையை எதிர்கொண்ட இலங்கையின் ஞாபகங்கள் குறைந்த ஆண்டுகளில் ஒன்றாக மாறிவிட்டது.
சொந்த மண்ணில் பலவீனமான ஜிம்பாப்வேயிடம் ஒரு நாள் சர்தேச தொடரில் தோல்வியடைந்தது ஒருபக்கம் இருக்க, ICC சம்பியன் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறவும் இலங்கை அணி தவறிவிட்டது.
அதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இரு தரப்பு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர்களில் வைட்வொஷ் (Whitewashes) செய்யப்பட்டது. பின்னர் இந்தியா சென்று ஆடிய மூன்று வகை போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியையே சந்தித்தது.
இலங்கை அணியின் மற்றொரு முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்கவினால் குறித்த காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், அணி ஆடுகளத்தில் அதிஷ்டத்தை இழந்த நிலையில் அதற்கு தீர்வுகாண முயற்சிக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அனாவசியமான கட்டுப்பாடுகளையே கொண்டுவந்தது.
முதல்தரமான கிரிக்கெட் விளையாடினால் வெற்றி பெறலாம் – மெதிவ்ஸ்
இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பான..
பிரச்சினையை ஆராய இறுதியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக அப்போதைய தேசிய தெரிவாளர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடர் வெற்றியை தவிர்த்து, இலங்கை அணிக்கு அது ஒரு கடுமையான ஆண்டாக இருந்தது.
எனினும் தென்னாபிரிக்கரான நிக் போதாஸின் இடத்திற்கு ஹத்துருசிங்கவின் வருகை செய்தியுடன் ஆரம்பித்து அண்மைக் காலத்தின் பிரச்சினைகள் அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதற்கு இலங்கை அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக ஜயவர்தன அவதானத்தோடு நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் ஜயவர்தன இலங்கை அணிக்காக 149 டெஸ்ட், 448 ஒரு நாள் மற்றும் 55 T-20 போட்டிகளில் ஆடியுள்ளார். அணியின் வெற்றிகளுக்கு அவர் முக்கிய பங்காளராகவும் இருந்துள்ளார்.
அபூதாபி கொல்ப் கழகத்தில் வைத்து, “சந்திக்க ஒரு சிறந்த தேர்வு” என்று குறிப்பிட்ட ஜயவர்தன, “போட்டியை புரிந்துகொண்டு திட்டங்களை வகுப்பது அவர் சிறந்த பயிற்சியாளராக இருப்பதற்கு ஒரு காரணமாகும்” என்றார். “அவர் ஒரு இலங்கையர் என்ற வகையில் கலாசாரத்தை புரிந்து வைத்திருப்பதோடு, வீரர்களை அவர்களின் இளமைக் காலத்தில் இருந்து தெரிந்து வைத்துள்ளார்” என்று மஹேல ஜயவர்தன குறிப்பிட்டார்.
ஹத்துருசிங்க மற்றும் மெதிவ்சுக்கு இடையில் ஒரு வலுவான நட்பு ஏற்படும் என்று 40 வயதான முன்னாள் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான ஜயவர்தன நம்பிக்கை வெளியிட்டார். “அவர் ஒரு அனுபவம் மிக்க வீரர் என்பதோடு தலைமைத்துவ பண்புகள் கொண்டவர்” என்று மெதிவ்ஸ் பற்றி அவர் கூறினார்.
30 வயது கொண்ட சகலதுறை வீரர் என்ற வகையில் “அடுத்தவர்கள் எடுக்கும் முடிவுகளை தவிர்த்து தம்மால் அணிக்கு தலைமை வகிக்க முடியும்” என்பதை அவர் வெளிக்காட்ட வேண்டும் என்றார்.
“அஞ்செலோவுக்கு சந்யுதிக்க பலம் சேர்த்து அவரை ஒரு சிறந்த தலைவராக தலைமை வகிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என்றும் மஹேல மேலும் குறிப்பிட்டார்.
ஒரே இரவில் திறமையை வெளிக்காட்ட எதிர்பார்ப்பதை தவிர்ப்பதற்காக, இது ஒரு புதிய முகாமையிலான அணி என்பதை ஜயவர்தன குறிப்பிட்டுக் கூறினார்.
“இது (முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் தீர்வு காணப்பட்டது) மாத்திரம் போதுமானதாக இல்லை. ஏனென்றால் தேர்வு செயற்பாடுகள் மற்றும் தலையீடு இன்றி பயிற்சியாளருக்கு அவரது பணியை செய்ய விடுவது போன்ற அனைத்தும் சரியாக இடம்பெற வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இளைஞர்களை கொண்ட அணி ஸ்திரமான நிலையை பெற்று சிறந்த கிரிக்கெட்டை வெளிக்காட்டும் என்று நம்புகிறேன்” என்றும் மஹேல ஜனவர்தன தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.