இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன உபாதை காரணமாக ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக்கிண்ண சுபர் 4 போட்டியின் போது மஹீஷ் தீக்ஷன உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். பௌண்டரி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபடும் போது இவருடைய தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டிருந்தது.
ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியை தவறவிடுவாரா தீக்ஷன?
எனவே நேற்று வெள்ளிக்கிழமை (15) இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் தசையில் உபாதை ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மஹீஷ் தீக்ஷன அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக சகலதுறை வீரர் சஹான் ஆராச்சிகே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக நடைபெற்ற உலகக்கிண்ண குவாலிபையர் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடர் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<