இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, ஐசிசியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சர்வதேச T20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான T20i தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், T20i தரவரிசையில் 13ஆவது இடத்தில் இருந்து 10ஆவது இடத்திற்கு அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.
அதேநேரம், இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அத்துடன், T20i சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 5ஆவது இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
- இரண்டாவது T20i போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி
- குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணையும் தசுன் ஷானக!
- ஹொங்கொங்கில் அதிரடி காட்டிய சமரி அத்தபத்த
இதனிடையே, நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது T20i போட்டியில் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை ஆடி இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த சரித் அசலன்க, 35ஆவது இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறி ஸ்கொட்லாந்து அணியின் ஜோர்ஜ் முன்சியுடன் 23ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதேநேரம், T20i போட்டிகளில் அண்மைக்காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் நியூசிலாந்து வீரர் டெரில் மிட்செல் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 25ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ள நிலையில், பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸ் 21ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன் T20i சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், T20i துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 62வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் 10ஆவது இடத்தை எட்டியுள்ள நிலையில், நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட தென்னாபிரிக்க வீரர் சிசண்டா மகலா 165ஆவது இடத்தை எட்டியுள்ளார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<