இலங்கையில் நடைபெறவிருந்த பிஃபா உலகக் கிண்ண தொடருக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியை மக்காவு புறக்கணித்ததற்கு அந்நாட்டு வீரர்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் மக்காவு எப்.ஏ. கிண்ணப் போட்டி ஒன்றில் 39 கோல்கள் போடப்பட்டுள்ளன.
අහම්බෙන් මුණගැසුණු මලල ක්රීඩාවෙන් ලෝකයට ගිය සුනිල් ගුණවර්ධන
පුංචි කාලේ නොහික්මුණ, දඟකාරයන් කොපමණ ……..
போட்டியிட்ட இரு அணிகளும் எதிர்ப்பின்றி பந்துகளை வலைக்குள் செலுத்தியதாலேயே இந்த ஆச்சரியமான எண்ணிக்கையில் கோல்கள் போடப்பட்டுள்ளன. மக்காவு கால்பந்து சம்மேளனத்திற்கான இந்தப் போட்டியின் முடிவு 21-18 கோல்கள் என பதிவாகியுள்ளது.
பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் ஆசிய கிண்ண தொடர் என்பவற்றுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியின் இரண்டாம் கட்ட ஆட்டம் இலங்கையில் கடந்த 11ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், மக்காவு கால்பந்து சம்மேளனம் அந்தப் போட்டியில் பங்கேற்பதை மறுத்தது. இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அது காரணம் கூறியது.
எனினும், இந்த தகுதிகாண் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் மக்காவு அணி 1-0 என வெற்றி பெற்ற நிலையில் அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் எடுத்த இந்த முடிவுக்கு மக்காவு தேசிய அணி மட்டுமன்றி 23 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட அணி வீரர்களும் தமது எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையாக கா ஐ மற்றும் ஹங் சாய் அணிகளுக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற எப்.ஏ. கிண்ணப் போட்டியில் மோசமான ஒரு அட்டத்தை இரு அணி வீரர்களும் வெளிப்படுத்தி இருந்தனர்.
இரு அணிகளும் போட்டியின்போது இலக்கற்று மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடுவதும் சவால் இன்றி கோல்கள் பெறுவதும் போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இதில் கோல்காப்பளர் கூட கோல் பெற்றதுதான் இந்த போட்டியின் உச்சபட்ச கேலியாக இருந்தது.
எதிரணி கோல் போடும்போது அடுத்த அணி கைதட்டி வரவேற்றது மற்றொரு சுவாரஷ்ய அம்சமாகும்.
අහම්බෙන් මුණගැසුණු මලල ක්රීඩාවෙන් ලෝකයට ගිය සුනිල් ගුණවර්ධන
පුංචි කාලේ නොහික්මුණ, දඟකාරයන් කොපමණ ……..
லிங் பொங் அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியின் முடிவில் கோல் எண்ணிக்கை பலகையில் 21-17 என பதிவானபோது உத்தியோகபூர்வ போட்டி முடிவு 21-18 என இருந்தது.
இந்தப் போட்டி பற்றி விசாரணை நடத்தப்படும் ஹங் சாய் அணி அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டி ரத்துச் செய்யப்பட்ட நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி அளிக்கப்பட்டு இந்தத் தகுதிகாண் சுற்றின் குழுநிலைக்கு இலங்கை அணி தகுதிபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இதுபற்றி உத்தியோகபூர்வ முடிவு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<