பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட சர்வேதேசப் பாடசாலைகளுக்கு இடைலான கிரிக்கெட் போட்டியில் ஜிஹான் டி சொய்சாவின் அதிரடி ஆட்டத்தினால் வத்தளை லைசியம் அணி சாம்பியனானது.
40 ஓவர்கள் கொண்ட இப்போட்டி ஹெல்த் மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வத்தளை லைசியம் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 40 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றது. நிதானமாக ஆடிய சர்மிதன் ஸ்ரீதரன் ஆட்டம் இழக்காமல் 112 ஓட்டங்களையும், ஜிஹான் டி சொய்சா ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நுகேகொட லைசியம் அணியினர் வத்தளை லைசியம் அணியின் பலமான பந்து வீச்சால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. நுகேகொட லைசியம் அணி சார்பாக செனிந்து பண்டார 29 ஓட்டங்களைப் பெற்றார், வத்தளை லைசியம் அணி சார்பாக்ப் பந்துவீச்சில் ஜிஹான் டி சொய்சா 40 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் பவித் லஹந்தக்குறக்க 11 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டி சுருக்கம்
லைசியம் சர்வேதேச பாடசாலை வத்தளை :
சர்மிதன் ஸ்ரீதரன் 112*, ஜிஹான் டி சொய்சா 102*, ஷாபீக் இஸ்தாரிக் 41
அவிஷ்க பெரேரா 2/49
லைசியம் சர்வேதேச பாடசாலை நுகேகொட :
செனிந்து பண்டார 29, ஸுவிக் மௌலானா 21
ஜிஹான் டிசொய்சா 4/40, பவித் லஹந்தக்குறக்க 3/11, கவிந்து ராஜகருண 2/26
முடிவு :
வத்தளை லைசியம் அணியினர் 170 ஓட்டங்களால் அபார வெற்றி அடைந்து 2016ஆம் ஆண்டுக்கான சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர்.