இந்திய அணிக்கெதிரான மோதலில் லுங்கி ன்கிடியினை இழக்கும் தென்னாபிரிக்கா

209
ICC

உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் உபாதைக்கு ஆளாகிய தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ன்கிடி, உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணி அடுத்ததாக பங்கேற்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த பங்களாதேஷ்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் …..

நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியும், தென்னாபிரிக்க அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சினை ஆரம்பம் செய்த லுங்கி ன்கிடி, 4 ஓவர்களை மாத்திரம் வீசிய நிலையில் மைதானத்தில் நடப்பதற்கு சிரமத்தை எதிர்கொண்டார். பின்னர் லுங்கி ன்கிடி போட்டியின் இடைநடுவே மைதானத்தினை விட்டு வெளியேறி, வைத்திய பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்தார்.

வைத்திய பரிசோதனைகளில் லுங்கி ன்கிடிக்கு இடதுகாலில் தசை உபாதை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதேநேரம், இந்த உபாதை காரணமாக ன்கிடி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து விளையாட மாட்டார் என தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் அறிவித்திருந்தனர். எனினும், லுங்கி ன்கிடியின் உபாதை தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் அப்போது வெளியிடப்படவில்லை.

உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பெறத் தவறியிருக்கும் இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இம்முறைக்கான …….

தொடர்ந்து லுன்கி ன்கிடியின் உபாதை தொடர்பில் கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்க அணியின் வைத்திய முகாமையாளர் மொஹம்மட் மூஸாஜீ, ன்கிடியின் உபாதை குணமாகி அவர் மீண்டும் போட்டிகளில் விளையாடுவதற்கான உடற்தகுதியினை பெற்றுக் கொள்ள 7 தொடக்கம் 10 வரையிலான நாட்கள் எடுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் லுங்கி ன்கிடி தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ணத் தொடரில்  எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் போட்டியில் விளையாடுவார் என நம்பப்படுகின்றது.

இதேநேரம், லுங்கி ன்கிடி உபாதைக்குள்ளான  பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்களால் தோல்வியினை தழுவிய தென்னாபிரிக்க அணி, அதற்கு முன்னர் தாம் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியிலும் 104 ஓட்டங்களால் மோசமான தோல்வி ஒன்றினை பதிவு செய்திருந்தது.

இவ்வாறாக உலகக் கிண்ணத்தொடரில் மோசமான ஆரம்பத்தினை பெற்றுக் கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு திறமைமிக்க லுங்கி ன்கிடியின் இழப்பும் பாரிய பின்னடைவாக மாறியுள்ளது. இதில் முக்கியமாக பலம் மிக்க இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்காமை தென்னாபிரிக்க அணிக்கு பெரும் பாதிப்பாகும்.

 >>மேலும் மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<