தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லுங்கி ன்கிடி இலங்கை அணியுடன் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>குஜராத் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரானார் பார்த்திவ் படேல்
லுங்கி ன்கிடிக்கு ஏற்பட்ட தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை அவர் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் போனமைக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தனது உபாதைக்காக சிகிச்சைகளை ஆரம்பித்துள்ள லுங்கி ன்கிடி பாகிஸ்தான் அணியுடனான தொடரிலும் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது. எனினும் உபாதைகள் குணமாகிய பின்னர் ஜனவரி மாதம் தொடக்கம் அவருக்கு தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் தென்னாபிரிக்க அணி ஏற்கனவே மற்றுமமொரு வேகப்பந்துவீச்சாளரான நன்ட்ரே பர்கரினையும் உபாதை காரணமாக இழந்திருப்பதனால் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் அவர்களுக்கு நெருக்கடியான நிலை உருவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 27ஆம் திகதி டர்பனில் ஆரம்பமாகுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.