இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறைவீரரான லூக் ரைட், இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
சர்ச்சையின் விளைவு; மன்செஸ்டர் யுனைடட்டில் இருந்து வெளியேறும் ரொனால்டோ
அந்தவகையில் தற்போது ஒக்லான்ட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற லூக் ரைட் அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் தொடக்கம் தனது புதிய பொறுப்பின் மூலம், இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிக்காக வீரர்களை தெரிவு செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் லூக் ரைட் வீரர்களை தெரிவு செய்யும் போது அவருக்கு ஆதரவு வழங்குவதற்காக இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி முகாமைத்துவ இயக்குனராக இருக்கும் ரொப் கீய், செயல்திறன் இயக்குனர் மோ போபாட், வீரர்கள் அடையாள தலைமை அதிகாரி டேவிட் கோர்ட் மற்றும் அணிப் பயிற்சியாளர்கள் ஆகியோர் காணப்படுகின்றனர்.
அதேவேளை தனது புதிய பொறுப்பு குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் லூக் ரைட், தனது முன்னாள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாறும் விடயமானது தனக்கு பெருமையினையும், கௌரவத்தினையும் தருவதாக தெரிவித்திருக்கின்றார்.
ஆஸி. கிரிக்கெட் சபையினை விமர்சிக்கும் டேவிட் வோர்னர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2010ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட போது அவ்வணிக் குழாத்தில் காணப்பட்டிருந்த லூக் ரைட், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக இதுவரை 101 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கின்றார்.
அத்துடன் T20 போட்டிகளின் சிறப்பு வீரராக காணப்படும் லூக் ரைட் மொத்தமாக 344 போட்டிகளில் ஆடி 8526 ஓட்டங்களையும், 79 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<