இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் உள்வாங்கப்பட்டுள்ள புதிய அணிகளில் ஒன்றான லக்னோவ், அதன் பெயர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.
சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை ஒப்புக்கொண்ட பிரண்டன் டெய்லர்
IPL தொடரில் பங்கெடுக்கும் அணிகள் 8 இலிருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டதனை அடுத்து அதில் லக்னோவ் மற்றும் அஹமதாபாத் ஆகிய பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணிகள் புதிதாக இணைக்கப்பட்டிருந்தன.
அதன்படி 2022ஆம் ஆண்டில் இருந்து IPL தொடரில் பங்கெடுக்கவுள்ள லக்னோவ் பிரதேசத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் அணியின் பெயர் ”லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ்” ஆக இருக்கும் என அவ்வணியின் உரிமையாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
RP சஞ்சீவ் குழுமம் மூலம் லக்னோவ் பிரதேசத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் IPL அணியானது கடந்த ஒக்டோபரில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்த அணிக்காக அதன் உரிமையாளர்கள் இந்திய நாணயப்படி 7,090 கோடி ரூபாய்களை (அதாவது இலங்கை நாணயப்படி அண்ணளவாக 19,912 கோடி ரூபாய்களை) செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் லக்னோவ் அணியின் தற்போதைய உரிமையாளர்கள் கடந்த 2016, 2017ஆம் ஆண்டுக்கான IPL தொடர்களில் சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் ராஜாஸ்தான் ரோயல்ஸ் ஆகியவற்றிற்கு பிரதியீட்டு அணிகளில் ஒன்றாக உள்வாங்கப்பட்டிருந்த ரைசிங் புனே சுபர்ஜயன்ட்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து ரொஷான் மஹாநாம திடீர் விலகல்
லக்னோவ் அணியின் பிரதான உரிமையாளராக இருக்கும் சஞ்சீவ் கோங்கா, லக்னோவ் அணியானது இரசிகர்கள் பங்கேற்றிருந்த ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் (Crowd Source) அடிப்படையில் பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
அதேநேரம் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் தலைவராக இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான கே.எல்.ராகுல் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கே.எல்.ராகுல் தவிர லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியானது அவுஸ்திரேலிய சகலதுறைவீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் இந்திய இளம் சுழல்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் ஆகியோரினை தமது வீரர்கள் குழாத்திற்குள் ஏற்கனவே உள்வாங்கியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் முதல் வெற்றியை சுவைத்த ஜப்னா, காலி
இதேவேளை லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியானது பெப்ரவரி மாதம் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள, IPL மெகா ஏலத்தில் தமது அணிக்கான எஞ்சிய வீரர்களை கொள்வனவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி தாம் ஏற்கனவே உள்வாங்கிய வீரர்களுக்கு செலவு செய்த பணம் தவிர, IPL மெகா ஏலத்தில் வீரர்கள் கொள்வனவுக்காக இந்திய நாணயப்படி 59 கோடி ரூபாய்களை பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<