லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் (LSG) உடன் இணையும் லேன்ஸ் குளூஸ்னர்

197

புதிய பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர்களில் ஒருவராக லேன்ஸ் குளூஸ்னர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.  

ஆப்கான் ஒருநாள் அணியில் இணையும் 3 புதுமுக வீரர்கள்

அந்தவகையில் தென்னாபிரிக்காவின் முன்னணி வீரர்களில் ஒருவரான லேன்ஸ் குளூஸ்னர் குஜராத் டைடன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக காணப்படும் ஜஸ்டின் லேங்கருடன் இணைந்து இந்தப் பருவத்தில் பணியாற்றவிருக்கின்றார் 

அண்மையில் நிறைவுக்கு வந்த SA20 லீக் தொடரில் டேர்பன் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக காணப்பட்ட குளூஸ்னர் IPL தொடரிலும் ஏற்கனவே பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில் குளூஸ்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகளின் பயிற்சியாளர்கள் குழாத்தில் ஏற்கனவே காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

அத்துடன் CPL தொடரில் 2023ஆம் ஆண்டு கன்னி சம்பியன் பட்டம் வென்ற கயானா அமேசன் வோரியர்ஸ், BPL தொடரில் ராஜாஷி கிங்ஸ் போன்ற அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தினையும் லேன்ஸ் குளூஸ்னர் கொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

அதேவேளை லீக் தொடர்கள் தவிர்த்து சர்வதேச அளவில் குளூஸ்னர் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்கா போன்றவற்றின் தேசிய கிரிக்கெட் அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

இந்த ஆண்டுக்கான IPL தொடர் இம்மாதம் 22ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<