இலங்கையில் அடுத்த ஆண்டு (2023) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் புதிய அணி பங்கேற்கவுள்ளதாக LPL பணிப்பாளர் சமந்த தொடான்வெல அறிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள LPL தொடரில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை 23 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி பங்களாதேஷ் பயணம்
LPL தொடரில் இணையவுள்ள புதிய அணியானது வடக்கு அல்லது வடமத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருக்கும் என்ற விடயத்தையும் சமந்த தொடான்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.
“மூன்று வருடங்கள் LPL தொடர் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு, 6 அணிகள் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதன்படி வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். அதேநேரம் அணிகளை வாங்குவதற்கான உரிமையாளர்களும் வரிசையிட்டுள்ளனர்” என சமந்த தொடான்வெல குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு LPL தொடர் டிசம்பர் மாதத்தில் நடைபெற்றாலும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக LPL நிர்வாகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<