லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைவர் பதவிக்கு தீவிர போட்டி
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்றைய தினம் (12) வெளியிட்ட ஊடக அறிக்கையின் மூலமே, லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பருவகாலத்திற்குரிய போட்டிகள் நடைபெறவுள்ள காலப்பகுதி உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
“நாங்கள் இந்த ஆண்டில் LPL தொடரினை நடாத்துவதற்குரிய பொருத்தமான கால அட்டவணையை தெரிவு செய்திருக்கின்றோம். அதேநேரம், நாங்கள் தொடர் பற்றிய இறுதி விடயங்களை தீர்மானிப்பது தொடர்பிலும் வேலை செய்து வருகின்றோம்.” என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவக் குழுவின் தலைவராக உள்ள பேராசியர் அர்ஜுன டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.
Video – Kusal Perara வின் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி இதுதான்…!| Sports RoundUp – Epi 161
கடந்த ஆண்டில் முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த LPL தொடர் முழுமையாக ஹம்பாந்தோட்டை நகரில் நடைபெற்றிருந்ததோடு, தொடரில் இலங்கையின் பிரதான நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 5 அணிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், கடந்த ஆண்டு கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உயிர் பாதுகாப்பு வலயத்தினுள் நடைபெற்றிருந்த LPL தொடரினை இம்முறையும் அதே நிலைமைகளில் நடாத்துவதற்குரிய பேச்சுவார்த்தைகளினையும் இலங்கை கிரிக்கெட் சபை சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<