லங்கா பிரீமியர் லீக் (LPL) 2024ஆம் ஆண்டு தொடரின் டிக்கட் விபரம் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் இன்று (24) அறிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடரின் முதல் போட்டியின் டிக்கெட்டுக்களை இன்று இணையதளம் வாயிலாக கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>T20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதியில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து!<<
LPL T20 தொடரின் ஐந்தாவது பருவத்திற்கான போட்டிகள் ஜூலை 01ஆம் திகதி தம்புள்ள சிக்ஸர்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் அணிகள் இடையில் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றது.
இந்த தொடரின் போட்டிகள் பல்லேகல சர்வதேச மைதானம் தவிர தம்புள்ளை ரங்கிரி மைதானம் மற்றும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் என்பவற்றில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை LPL T20 தொடரின் டிக்கெட் ஆரம்ப விலையாக ரூபா. 200 காணப்படுவதோடு, அதிகபட்ச விலையாக ரூபா. 3000 நிர்ணயிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் விலை விபரம்
இணையதளம் வாயிலாக கொள்வனவு செய்ய:
https://lk.bookmyshow.com/select/region?referer=/special/kandy-vsdambulla/ET00005360
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<