Home Tamil நிஸ்ஸங்க, அவிஷ்க அதிரடியில் ஜப்னா கிங்ஸ் இலகு வெற்றி

நிஸ்ஸங்க, அவிஷ்க அதிரடியில் ஜப்னா கிங்ஸ் இலகு வெற்றி

Lanka Premier League 2024

149
LPL 2024 Match 8

லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரில் ஜப்னா கிங்ஸ் மற்றும்  இடையிலான முதல் சுற்று லீக் மோதலில், ஜப்னா கிங்ஸ் அணியானது 30 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

மேலும் இந்தப் போட்டியோடு LPL T20 தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியானது மூன்றாவது தொடர் வெற்றியினைப் பதிவு செய்து முன்னேறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   

தொடரின் 8ஆவது லீக் போட்டியான இந்த மோதல் நேற்று (06) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்

>> கோல் அணியில் இணையும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் 

இதன்படி முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி பெதும் நிஸ்ஸங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரது அதிரடியில் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்கள் எடுத்து, இந்தப் பருவத்திற்கான LPL தொடரில் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்தது. 

ஜப்னா கிங்ஸ் அணியின் தரப்பில் பெதும் நிஸ்ஸங்க 53 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களைப் பதிவு செய்தார். மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ 30 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்றார். தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

>> கோல் மார்வல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர்கள்!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 219 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. தம்புள்ளை அணிக்காக போராடிய ரீசா ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகளோடு 80 ஓட்டங்கள் பெற்றார் 

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ப்ரமோத் மதுசான், அசித பெர்னாண்டோ மற்றும் தப்ரைஸ் சம்ஷி ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர் 

ஸ்கோர் விபரம் 

Result


Dambulla Sixers
188/8 (20)

Jaffna Kings
218/5 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Reeza Hendricks b Nuwan Thushara 88 53 9 4 166.04
Kusal Mendis c Mark Chapman b Mustafizur Rahman 18 12 1 1 150.00
Rilee Rossouw c Nuwanidu Fernando b Dushan Hemantha 12 11 0 1 109.09
Avishka Fernando c Mark Chapman b Chamindu Wickramasinghe 57 30 3 5 190.00
Charith Asalanka c Mark Chapman b Mustafizur Rahman 13 6 1 1 216.67
Azmatullah Omarzai not out 19 6 0 3 316.67
Fabian Allen not out 4 3 0 0 133.33


Extras 7 (b 0 , lb 6 , nb 1, w 0, pen 0)
Total 218/5 (20 Overs, RR: 10.9)
Bowling O M R W Econ
Nuwan Thushara 4 0 48 1 12.00
Dilshan Madushanka 4 0 39 0 9.75
Mustafizur Rahman 4 0 39 2 9.75
Mohammad Nabi 3 0 37 0 12.33
Dushan Hemantha 4 0 38 1 9.50
Chamindu Wickramasinghe 1 0 11 1 11.00


Batsmen R B 4s 6s SR
Reeza Hendricks c & b Azmatullah Omarzai 80 50 9 3 160.00
Kusal Perera c Asitha Fernando  b Avishka Fernando 16 7 3 0 228.57
Dhanushka Gunathilake c Kusal Mendis b Asitha Fernando  1 3 0 0 33.33
Nuwanidu Fernando st Kusal Mendis b Tabraiz Shamsi 16 8 2 1 200.00
Mark Chapman c Ahan Wickramasinghe b Fabian Allen 30 17 5 0 176.47
Mohammad Nabi st Kusal Mendis b Tabraiz Shamsi 7 10 0 0 70.00
Chamindu Wickramasinghe not out 20 17 2 0 117.65
Dushan Hemantha c Kusal Mendis b Pramod Madushan 3 6 0 0 50.00
Dilshan Madushanka c Charith Asalanka b Pramod Madushan 0 1 0 0 0.00
Mustafizur Rahman not out 1 1 0 0 100.00


Extras 14 (b 0 , lb 4 , nb 0, w 10, pen 0)
Total 188/8 (20 Overs, RR: 9.4)
Bowling O M R W Econ
Pramod Madushan 4 0 48 2 12.00
Azmatullah Omarzai 4 0 46 1 11.50
Asitha Fernando  4 0 25 2 6.25
Tabraiz Shamsi 4 0 26 2 6.50
Fabian Allen 4 0 39 1 9.75



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<