லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகியவை இடையிலான நேற்றைய மோதலில், கொழும்பு அணியானது 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
சுப்பர் ஓவரில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்திய கோல் மார்வல்ஸ்!
மேலும் இந்த வெற்றியுடன் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி LPL தொடரின் பிளே ஒப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
LPL T20 தொடரின் 17ஆவது லீக் மோதலான இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச அரங்கில் முன்னதாக இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியதோடு 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்கள் பெற்றது.
ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக விஜயகாந்த் வியாஸ்காந்த் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் பந்துவீச்சில் சதாப் கான் வெறும் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, பினுர பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 110 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி வெறும் 9.5 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கை ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 112 ஓட்டங்களுடன் அடைந்தது.
கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் றஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்காது 33 பந்துகளில் 57 ஓட்டங்கள் பெற, மொஹமட் வஸீம் 18 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Isitha Wijesundara b Binura Fernando | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Kusal Mendis | b Thisara Perera | 17 | 11 | 1 | 1 | 154.55 |
Rilee Rossouw | c Rahmanullah Gurbaz b Binura Fernando | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Avishka Fernando | c Isitha Wijesundara b Shadab Khan | 11 | 15 | 1 | 0 | 73.33 |
Charith Asalanka | c Rahmanullah Gurbaz b Shadab Khan | 13 | 12 | 2 | 0 | 108.33 |
Dhananjaya de Silva | st Rahmanullah Gurbaz b Shadab Khan | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Fabian Allen | c Muhammad Waseem b Shadab Khan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Vijayakanth Viyaskanth | not out | 25 | 34 | 2 | 0 | 73.53 |
Pramod Madushan | c & b Matheesha Pathirana | 10 | 13 | 2 | 0 | 76.92 |
Eshan Malinga | lbw b Isitha Wijesundara | 15 | 17 | 0 | 1 | 88.24 |
Extras | 9 (b 0 , lb 6 , nb 0, w 3, pen 0) |
Total | 109/9 (20 Overs, RR: 5.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 4 | 0 | 24 | 2 | 6.00 | |
Thisara Perera | 2 | 0 | 15 | 1 | 7.50 | |
Dunith Wellalage | 4 | 0 | 23 | 0 | 5.75 | |
Shadab Khan | 4 | 0 | 10 | 4 | 2.50 | |
Matheesha Pathirana | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Isitha Wijesundara | 2 | 0 | 11 | 1 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | not out | 57 | 33 | 4 | 4 | 172.73 |
Angelo Perera | c Avishka Fernando b Pramod Madushan | 16 | 8 | 3 | 0 | 200.00 |
Muhammad Waseem | not out | 35 | 18 | 2 | 3 | 194.44 |
Extras | 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0) |
Total | 112/1 (9.5 Overs, RR: 11.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jason Behrendorff | 2 | 0 | 22 | 0 | 11.00 | |
Fabian Allen | 2 | 0 | 18 | 0 | 9.00 | |
Pramod Madushan | 2 | 0 | 26 | 1 | 13.00 | |
Vijayakanth Viyaskanth | 2 | 0 | 20 | 0 | 10.00 | |
Eshan Malinga | 1.5 | 0 | 26 | 0 | 17.33 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<