லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் இடையிலான நேற்றைய மோதலில், கொழும்பு அணியானது 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>> இலகு வெற்றியுடன் பிளே ஒப் சுற்றில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி
இன்னும் கொழும்பு அணி இந்த போட்டியுடன் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்ய, கோல் மார்வல்ஸ் அணிக்கு அவர்களது இறுதி லீக் மோதலில் தோல்வி கிடைத்திருக்கின்றது.
LPL T20 தொடரின் 19ஆவது லீக் மோதலான இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச அரங்கில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்கள் பெற்றது.
கோல் மார்வல்ஸ் அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக டிம் சைபார்ட் 44 ஓட்டங்கள் பெற, பானுக்க ராஜபக்ஷ அதிரடி காட்டி 15 பந்துகளில் 35 ஓட்டங்கள் பெற்றார்.
கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் பந்துவீச்சில் மதீஷ பதிரன 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற சதாப் கான் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 139 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 18.2 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கை மூன்று விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களுடன் அடைந்தது.
கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் வஸீம் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பு வெற்றியை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Angelo Perera b Binura Fernando | 10 | 13 | 2 | 0 | 76.92 |
Alex Hales | c Thisara Perera b Dunith Wellalage | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Tim Seifert | c Binura Fernando b Shadab Khan | 44 | 38 | 3 | 2 | 115.79 |
Sadisha Rajapaksa | lbw b Dunith Wellalage | 15 | 17 | 2 | 0 | 88.24 |
Bhanuka Rajapaksa | c Glenn Phillips b Isitha Wijesundara | 35 | 15 | 1 | 4 | 233.33 |
Sahan Arachchige | c Muhammad Waseem b Matheesha Pathirana | 12 | 12 | 1 | 1 | 100.00 |
Janith Liyanage | c Angelo Perera b Matheesha Pathirana | 13 | 11 | 1 | 0 | 118.18 |
Isuru Udana | c Muhammad Waseem b Shadab Khan | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dwaine Pretorius | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Maheesh Theekshana | b Matheesha Pathirana | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Jeffrey Vandersay | b Matheesha Pathirana | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0) |
Total | 138/10 (19.5 Overs, RR: 6.96) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Thisara Perera | 2 | 0 | 19 | 0 | 9.50 | |
Dunith Wellalage | 4 | 0 | 30 | 2 | 7.50 | |
Shadab Khan | 4 | 0 | 20 | 2 | 5.00 | |
Isitha Wijesundara | 2 | 0 | 21 | 1 | 10.50 | |
Matheesha Pathirana | 3.5 | 0 | 20 | 4 | 5.71 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | b Maheesh Theekshana | 23 | 17 | 4 | 0 | 135.29 |
Angelo Perera | c Tim Seifert b Isuru Udana | 11 | 6 | 1 | 1 | 183.33 |
Muhammad Waseem | lbw b Sahan Arachchige | 50 | 44 | 4 | 2 | 113.64 |
Glenn Phillips | not out | 31 | 32 | 1 | 1 | 96.88 |
Sadeera Samarawickrama | not out | 15 | 12 | 2 | 0 | 125.00 |
Extras | 12 (b 0 , lb 5 , nb 1, w 6, pen 0) |
Total | 142/3 (18.2 Overs, RR: 7.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dwaine Pretorius | 4 | 0 | 29 | 0 | 7.25 | |
Isuru Udana | 4 | 0 | 50 | 1 | 12.50 | |
Maheesh Theekshana | 4 | 0 | 17 | 1 | 4.25 | |
Jeffrey Vandersay | 4 | 0 | 26 | 0 | 6.50 | |
Janith Liyanage | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
Sahan Arachchige | 1.2 | 0 | 9 | 1 | 7.50 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<