லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் இடையிலான நேற்றைய மோதலில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் 28 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>ஆட்டநயாகன் விருதுக்கான தொகையை நன்கொடையாக வழங்கிய தீக்ஷன<<
LPL T20 தொடரின் 20ஆவது மற்றும் இறுதி லீக் மோதலான இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச அரங்கில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்கள் பெற்றது.
தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அதன் தலைவர் மொஹமட் நபி 40 ஓட்டங்கள் பெற்றார்.
கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் பந்துவீச்சில் பினுர பெர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும் மதீஷ பதிரன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 124 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வி அடைந்தது.
>>தொடர் வெற்றிகளோடு கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி<<
கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் திசர பெரேரா 30 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் தம்புள்ளை சிக்ஸர்ஸ் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும், சமிந்து விக்ரமசிங்க 2 விக்கெட்டுக்களயும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தனர்.
இதேநேரம் இப்போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியானது நிகர் ஓட்டவீதம் (NRR) போதுமாக இல்லாத காரணத்தினால் LPL தொடரில் இருந்து வெளியேறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Reeza Hendricks | c Rahmanullah Gurbaz b Isitha Wijesundara | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Kusal Perera | run out (Matheesha Pathirana) | 7 | 9 | 0 | 0 | 77.78 |
Nuwanidu Fernando | b Binura Fernando | 15 | 8 | 2 | 1 | 187.50 |
Mark Chapman | run out (Isitha Wijesundara) | 8 | 9 | 1 | 0 | 88.89 |
Towhid Hridoy | c Rahmanullah Gurbaz b Binura Fernando | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Mohammad Nabi | c Angelo Perera b Binura Fernando | 40 | 33 | 4 | 2 | 121.21 |
Chamindu Wickramasinghe | b Matheesha Pathirana | 26 | 29 | 1 | 1 | 89.66 |
Dushan Hemantha | c Muhammad Waseem b Dunith Wellalage | 10 | 7 | 0 | 1 | 142.86 |
Akila Dananjaya | c & b Matheesha Pathirana | 8 | 9 | 1 | 0 | 88.89 |
Nuwan Pradeep | lbw b Dunith Wellalage | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Nuwan Thushara | not out | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 1 , lb 1 , nb 0, w 6, pen 0) |
Total | 123/10 (20 Overs, RR: 6.15) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 4 | 1 | 15 | 3 | 3.75 | |
Isitha Wijesundara | 4 | 0 | 16 | 1 | 4.00 | |
Thisara Perera | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
Shadab Khan | 4 | 0 | 33 | 0 | 8.25 | |
Matheesha Pathirana | 4 | 0 | 25 | 2 | 6.25 | |
Dunith Wellalage | 2 | 0 | 18 | 2 | 9.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | b Chamindu Wickramasinghe | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Angelo Perera | c Mark Chapman b Chamindu Wickramasinghe | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Muhammad Waseem | c Mark Chapman b Nuwan Pradeep | 15 | 6 | 2 | 1 | 250.00 |
Glenn Phillips | c Mohammad Nabi b Akila Dananjaya | 15 | 15 | 1 | 1 | 100.00 |
Sadeera Samarawickrama | c Akila Dananjaya b Nuwan Pradeep | 6 | 7 | 0 | 0 | 85.71 |
Dunith Wellalage | b Mohammad Nabi | 11 | 12 | 2 | 0 | 91.67 |
Thisara Perera | c Reeza Hendricks b Nuwan Pradeep | 30 | 31 | 1 | 3 | 96.77 |
Shadab Khan | run out (Sonal Dinusha ) | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Isitha Wijesundara | c Nuwanidu Fernando b Dushan Hemantha | 12 | 17 | 1 | 0 | 70.59 |
Binura Fernando | run out (Nuwan Thushara) | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Matheesha Pathirana | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 95/10 (18.1 Overs, RR: 5.23) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | 4 | 0 | 13 | 2 | 3.25 | |
Nuwan Pradeep | 2.1 | 0 | 20 | 3 | 9.52 | |
Nuwan Thushara | 2 | 0 | 17 | 0 | 8.50 | |
Akila Dananjaya | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
Mohammad Nabi | 4 | 0 | 11 | 1 | 2.75 | |
Nuwanidu Fernando | 1 | 0 | 13 | 0 | 13.00 | |
Dushan Hemantha | 1 | 0 | 2 | 1 | 2.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<