Home Tamil குசல் பெரேராவின் அதிரடியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் வெற்றி

குசல் பெரேராவின் அதிரடியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் வெற்றி

146

லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ்  இடையிலான நேற்றைய மோதலில், தம்புள்ளை அணியானது 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

உதான, டிம் சீஃபேர்ட் அதிரடியில் கோல் மார்வல்ஸுக்கு ஹெட்ரிக் வெற்றி

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய கொழும்பு அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை 6 விக்கெட்டுக்களை இழந்து பெற்றது.

கொழும்பு அணி துடுப்பாட்டத்தில் கிளன் பிலிப்ஸ் 36 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் ஒரு பெளண்டரி அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்தார். அஞ்செலோ பெரேரா 41 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 186 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி குசல் பெரேராவின் அதிரடியோடு போட்டியின் வெற்றி இலக்கை 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ஜப்னா கிங்ஸ்

தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றியை உறுதி செய்த குசல் பெரேரா 50 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ரீசா ஹென்ரிக்ஸ் 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகளோடு 54 ஓட்டங்கள் எடுத்தார்.

கொழும்பு அணிக்காக தஸ்கின் அஹ்மட் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக குசல் பெரேரா தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

Result


Dambulla Sixers
188/2 (17.5)

Colombo Strikers
185/6 (20)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Nuwanidu Fernando b Dushan Hemantha 36 28 4 1 128.57
Angelo Perera run out () 41 27 6 1 151.85
Glenn Phillips c Dushan Hemantha b Nuwan Pradeep 52 36 1 3 144.44
Sadeera Samarawickrama c Nuwan Pradeep b Mohammad Nabi 4 4 0 0 100.00
Shadab Khan c Lahiru Udara b Mohammad Nabi 4 8 0 0 50.00
Thisara Perera c Mohammad Nabi b 7 5 1 0 140.00
Chamika Karunaratne not out 27 12 2 2 225.00
Dunith Wellalage not out 0 1 0 0 0.00


Extras 14 (b 1 , lb 2 , nb 1, w 10, pen 0)
Total 185/6 (20 Overs, RR: 9.25)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 3 0 27 0 9.00
Nuwan Pradeep 4 0 41 2 10.25
Mustafizur Rahman 4 0 53 0 13.25
Dushan Hemantha 3 0 22 1 7.33
Mohammad Nabi 4 0 20 2 5.00
Chamindu Wickramasinghe 2 0 19 0 9.50


Batsmen R B 4s 6s SR
Reeza Hendricks c Dunith Wellalage b Taskin Ahmed 54 39 4 3 138.46
Kusal Perera c Angelo Perera b Taskin Ahmed 80 50 8 4 160.00
Lahiru Udara not out 11 8 1 0 137.50
Mark Chapman not out 23 10 0 3 230.00


Extras 20 (b 4 , lb 1 , nb 0, w 15, pen 0)
Total 188/2 (17.5 Overs, RR: 10.54)
Bowling O M R W Econ
Binura Fernando 4 0 25 0 6.25
Taskin Ahmed 4 0 45 2 11.25
Chamika Karunaratne 1 0 9 0 9.00
Thisara Perera 1 0 10 0 10.00
Shadab Khan 3 0 32 0 10.67
Matheesha Pathirana 3.5 0 49 0 14.00
Dunith Wellalage 1 0 13 0 13.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<